இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்கவைப்பவர்களுக்கு ஆப்பு..!
நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அமைச்சர் வசந்த சமரசிங்க […]









