தென்மராட்சிக் கல்வி வலயத்திற்குட்பட்ட இடைக்குறிச்சி ஸ்ரீசுப்பிரமணிய வித்தியாலயத்திற்கு திருமதி க.சின்னப்பிள்ளை அவர்களுடைய நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு ஒருதொகுதி பிளாஸ்டிக் கதிரைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர் திருமதி.ச.மயூரிக்கா அவர்கள் தனது அம்மம்மாவான திருமதி.க.சின்னப்பிள்ளை அவர்களுடைய நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு மேற்படி அன்பளிப்பை பாடசாலைக்கு வழங்கியுள்ளார்.
இதன்போது மாணவர்களின் தேவைக்காக 125 பிளாஸ்டிக் கதிரைகளை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
ஆயிரம் பிறை கண்டு அவனியில் வாழ்ந்து வரும் அன்னைக்கும் அவருடைய குடும்பத்திற்கும் பாடசாலை சமூகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?

