oil price rise | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை..!

  • May 11, 2026 - 10:39 AM
  • 0 Comments

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன்படாததே, கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 104.1 டொலராகப் பதிவாகியுள்ளதுடன், டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.51 டொலராகவும் பதிவாகியுள்ளது. […]

landslide alert 5 districts | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

  • May 11, 2026 - 10:33 AM
  • 0 Comments

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (11.05.2026) இரவு 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பின்வரும் மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: பதுளை மாவட்டம்: பசறை குருநாகல் மாவட்டம்: ரிதிகம மாத்தளை மாவட்டம்: நாவுல, அம்பன்கங்க கோரளை மற்றும் ரத்தோட்டை மொனராகலை மாவட்டம்: […]

yaazh devi service | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் தேவி தொடரூந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..!

  • May 11, 2026 - 10:06 AM
  • 0 Comments

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான யாழ் தேவி (Yal Devi) ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பயண விபரங்கள்: இலங்கை புகையிரத சேவையின் அறிவிப்பின்படி, யாழ் தேவி புகையிரதத்தின் பயண நாட்கள் மற்றும் ஒழுங்குகள் வருமாறு: கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம்/காங்கேசன்துறை நோக்கி: திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயணிக்கும். யாழ்ப்பாணம்/காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி: செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிக்கும். வடக்கு ரயில் பாதையில் […]

mannar sand permits cancelled | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வுக்கான உரிமங்கள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து..!

  • May 11, 2026 - 09:57 AM
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்தல், மணல் அகழ்வு உரிமங்களை வழங்குதல் மற்றும் மணல் விலையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் மணல் வர்த்தகர்களுக்கு இடையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (10.05.2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மணல் அகழ்வு உரிமங்களை வழங்குவது புதிய விதிமுறைகளின் கீழ் […]

samara arrives sl | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘படுவத்தே சாமர’..!

  • May 11, 2026 - 09:39 AM
  • 0 Comments

அசர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் உறுப்பினரான மனோஜ் சுரங்க அல்லது ‘படுவத்தே சாமர’ என்பவர் நேற்று(10.05.2026) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். சந்தேகநபர் இந்தியா ஊடாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரை அழைத்து வருவதற்காக இலங்கைப் பொலிஸ் குழுவொன்று கடந்த 7ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

overflowing reservoirs | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வான்பாயும் 12 நீர்த்தேக்கங்கள்..!

  • May 11, 2026 - 09:32 AM
  • 0 Comments

தற்போது நிலவும் கடும் மழை வீழ்ச்சியுடன், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.டி.பி.எஸ்.டி. ஹேரத் இது குறித்து தெரிவிக்கையில், அனுராதபுரம் மாவட்டத்தின் ராஜங்கனை, பதுளை மாவட்டத்தின் சொரபொர வாவி, கண்டி மாவட்டத்தின் வே மெடில்ல நீர்த்தேக்கம், தேவஹூவ, நாலந்த, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில, யோத எல, […]

electricity tariff revision | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று முதல் அமுல் ஆகும் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம்..!

  • May 11, 2026 - 09:26 AM
  • 0 Comments

ந்த ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11.05.2026) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. இதன்போது மின்சாரக் கட்டணங்களை 8% முதல் 14.4% வரையிலான சதவீதத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறான பின்னணியில், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மின் உற்பத்திக்கான செலவு […]

100mm rain warning | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில்100 மி.மீ. வரை கொட்டித் தீர்க்கப்போகும் மழை..!

  • May 11, 2026 - 09:09 AM
  • 0 Comments

தாழ் வளிமண்டல தளம்பல் நிலைமை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் குறைந்த அழுத்தப் பிரதேசமாக வளர்ச்சியடையக்கூடும் எனவும், இதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை வரும் நாட்களில் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தொகுதியின் செல்வாக்கினால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு, வடமேல், வடக்கு […]

study in jaffna launch | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடன் வடபுல மாணவர்களை இணைக்கும் “Study In யாழ்ப்பாணம்” கல்வி நிறுவனம் கோலாகலமாகத் திறப்பு..!

  • May 8, 2026 - 02:22 PM
  • 0 Comments

வடபகுதி மாணவர்களின் சர்வதேச உயர்கல்விக் கனவை நனவாக்கும் நோக்குடன், சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடன் அவர்களை நேரடியாக இணைக்கும் “Study In யாழ்ப்பாணம்” கல்வி நிறுவனத்தின் பிரமாண்ட திறப்பு விழா இன்று (08) யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் கௌரவ நா. வேதநாயகன் மற்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் ம. பிரதீபன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு, நாடா வெட்டி நிறுவனத்தின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். முன்னதாக, விழாவிற்கு […]

paruthithurai fish market meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்..!

  • May 8, 2026 - 01:51 PM
  • 0 Comments

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் சந்தை நிர்வாகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (08.05.2026)காலை 10:30 மணியளவில் பருத்தித்துறை நகர சபையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர், செயலாளர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மீன் சந்தை வியாபாரிகள் சார்பில் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்று தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். கலந்துரையாடலின் போது, வியாபாரிகள் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp