protesters in palaly disrupt traffic demand land release | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலியில் போராடியவர்களால் போக்கு வரத்திற்கு இடையூறாம்..!

  • Aug 18, 2026 - 09:49 AM
  • 0 Comments

வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தபட்டதாக கூறி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளார். பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்ரன் சுதாகர், வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன் , ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் கணேசப்பிள்ளை வேந்தன் மற்றும் எம். குணசேகரன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் […]

reason behind athurugiriya shooting revealed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுதானாம்..!

  • Aug 18, 2026 - 09:46 AM
  • 0 Comments

அத்துருகிரிய – ஹபரகட, முல்லேகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு இரு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே நிலவும் மோதலே காரணம் எனப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெளிநாடொன்றில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘ஹபரகட கசூன்’ என்பவரின் உறவினர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (17.08.2026) இரவு இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 29 வயதான வர்த்தகர் ஒருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் […]

kalmunai hospital uniform issue resolved says mp kodeeswaran | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை பிரச்சனை முடிவுக்கு வந்தது..! அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கூறுகிறார்.

  • Aug 18, 2026 - 09:44 AM
  • 0 Comments

கடந்த இரண்டு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்த, அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றதாக கூறப்படும் சுகாதார உதவியாளரின் சீருடை தொடர்பான பிரச்சனை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது . இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார் . கடந்த இரண்டு வார காலமாக பிரச்சினை கொழுந்து விட்டு எரிகிறதே. இது வரை நீங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.எனவே இது தொடர்பாக உங்களது […]

indias defence minister set to visit sri lanka officially | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்கு ஆயத்தமாம்..!

  • Aug 18, 2026 - 09:40 AM
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயம் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை […]

heavy rain and strong winds across sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்தகாற்று..!

  • Aug 18, 2026 - 09:37 AM
  • 0 Comments

18.08.2026 சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு […]

health assistants protest in kalmunai over uniform circular | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சீருடை சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்துங்கள்! கல்முனையில் சுகாதார உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

  • Aug 17, 2026 - 02:16 PM
  • 0 Comments

சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்துமாறு கோரி கல்முனையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது . கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று (17) திங்கள் கிழமை காலை அரைமணி நேரம் அங்குள்ள சுகாதார உதவியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் “சுகாதார அமைச்சின் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான சுற்று நிருபத்தை சாதி இன மத பேதமின்றி சகலருக்கும் பொதுவாக முறையாக அமல்படுத்துங்கள். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவரவர் கலாச்சார உடை […]

navy rescues lives in gregory lake incident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிரகரி வாவியில் அனர்த்தம்..! உயிர்காத்த கடற்படை

  • Aug 17, 2026 - 01:18 PM
  • 0 Comments

நுவரெலியா – கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட படகு விபத்தில், அனர்த்தத்திற்குள்ளான இரண்டு சிறுவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். நேற்று (16.08.2026) இடம்பெற்ற இந்த விபத்தின் போது, வாவியில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையின் விரைவு மீட்புக் பிரிவினரால் குறித்த இரண்டு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்கள் […]

development officers protest over disrespectful remarks | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கு அதிகாரிகளின் தரக்குறைவான பேச்சு – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்..!

  • Aug 17, 2026 - 01:00 PM
  • 0 Comments

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வடமாகாண சபையின் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில், வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகள் சிலர் கூடி விரும்பத்தகாத கருத்துக்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டமை தொடர்பிலான ஒலி பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன. குறித்த ஒலிப்பதிவில் , உள்ள குரல்கள் தொடர்பில் ஆய்வு செய்து , […]

nallur kandan festival begins with flag hoisting | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

நல்லூர் கந்தனின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது..!

  • Aug 17, 2026 - 12:55 PM
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை(17.08.2026) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, பூஜை வழிபாடுகள் இடம்பெற்று காலை 10 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து இடம்பெற்று எதிர்வரும் 09ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , மறுநாள் 10ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் இடம்பெறும். […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊