thileepans sacrificial remembrance day 11 | Pathivu News உள்ளூர் ஈழம் புதியவை முக்கிய செய்திகள்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 11ம் நாள்..!

  • Sep 25, 2026 - 11:07 AM
  • 0 Comments

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில் 11ஆம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது அதன் போது மாவீரர்களான, யோகவதி, ஜூட் மற்றும் மேஜர் சோதியா ஆகிய மூன்று மாவீரர்களின் சகோதரி பிரகலாதன் மேரிசாந்தி ஈகை சுடரினை ஏற்றியதை தொடர்ந்து , தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் […]

hunger strike in front of jaffna university amid heavy police presence | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்.பல்கலை முன் உணவுதவிர்ப்பு போராட்டம் – குவிக்கப்பட்ட பொலிஸால் பரபரப்பு..!

  • Sep 25, 2026 - 10:44 AM
  • 0 Comments

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாள்கள் அஹிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாக தீபத்தின் நினைவைப் போற்றும் வகையில் இடம்பெறவுள்ள இந்த […]

upcountry literary figure m sivalingam passes away | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மலையகத்தின் பிரபல இலக்கியவாதி மு. சிவலிங்கம் காலமானார்..!

  • Sep 25, 2026 - 10:29 AM
  • 0 Comments

மலையகத்தின் பிரபல இலக்கியவாதியும், தொழிற்சங்க மற்றும் அரசியல் ஆளுமையுமான மு. சிவலிங்கம் நேற்று (24.09.2026) காலமானார். மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான அவர், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மலையகத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த அவர், சிறுகதைகள், நாவல்கள், அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் திறனாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் படைப்புகளை உருவாக்கியுள்ளார். அவரது ‘ஒப்பாரி கோச்சி’ சிறுகதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.

uae supports sri lanka to improve vocational education | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தொழிற்கல்வித் துறையை மேம்படுத்த இலங்கைக்கு ஐக்கிய அரபு இராச்சியம் ஆதரவு..!

  • Sep 25, 2026 - 09:56 AM
  • 0 Comments

இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சித் (TVET) துறையை வலுப்படுத்துவதற்கான எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (24) நடைபெற்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் வளர்ந்து வரும் கைத்தொழில்களுக்குத் தேவையான திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும். தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் இதன்போது விளக்கமளித்த பிரதமர், தொழிற்கல்விக்கான முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு […]

sl beat england by 16 runs in second odi | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி..!

  • Sep 25, 2026 - 09:35 AM
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் அடிப்படையில் இலங்கை அணி இந்தப் போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட […]

mullaitivu records 35 7 degree celsius temperature today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் இன்று வெப்பநிலை 35.7 பாகை செல்சியஸ்..!

  • Sep 25, 2026 - 09:33 AM
  • 0 Comments

வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கடற்கரைகள் வழியாக இந்திய நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய நாளில் அதிகபட்ச வெப்பநிலையான 35.7 பாகை செல்சியஸ் முல்லைத்தீவு வளிமண்டலவியல் நிலையத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

legal action to grant 73 65 perch land to eravur aligarh national school | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்காக சுவீகரிக்கப்பட்ட 73.65 பேர்ச் காணியை சட்டரீதியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

  • Sep 25, 2026 - 09:31 AM
  • 0 Comments

பாராளுமன்றத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்காக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள 73.65 பேர்ச் காணியை சட்டரீதியாக பாடசாலைக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று (24.09.2026) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2363185714424338

mlam hisbullah attends saudi arabia 96th national day reception | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சவூதி அரேபியாவின் 96வது தேசிய தின வரவேற்பு நிகழ்வில் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு.!

  • Sep 25, 2026 - 09:27 AM
  • 0 Comments

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகத்தின் பதில் தூதுவர் மேன்மைதகு யாசிர் அப்துர்ரஹ்மான் அல்-ஹஸ்மி அவர்களின் ஏற்பாட்டில், சவூதி அரேபியாவின் 96வது தேசிய தினத்தை முன்னிட்டு கொழும்பு ITC ஹோட்டலில் நேற்று (24.09.2026) நடைபெற்ற விசேட வரவேற்பு நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பங்கேற்றார். இந்நிகழ்வில் இலங்கைக்கான பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

preschool children digital screen use increases significantly | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு..!

  • Sep 24, 2026 - 12:26 PM
  • 0 Comments

இலங்கையில் முந்திய குழந்தை பருவ (முன்பள்ளி) சிறுவர்களின் டிஜிட்டல் திரை (Screen Time) பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, முந்திய குழந்தை பருவத்திலுள்ள சிறுவர்களில் 64 சதவீதமானோர் தினமும் அரை மணித்தியாலத்திற்கு அதிகமான நேரத்தை கைபேசிகள் அல்லது கணினிகளைப் பார்ப்பதில் செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின்படி, சிறுவர் ஒருவர் தினமும் அரை மணித்தியாலத்திற்கும் குறைவான நேரமே டிஜிட்டல் […]

jaffna water bottle overpricing fined rs 90000 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில். அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை – 90 ஆயிரம் ரூபாய் தண்டம்..!

  • Sep 24, 2026 - 12:24 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த குற்றத்திற்கு 90 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த விடுதியில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விடுதி முகாமையாளர் நீதிமன்றில் முன்னிலையாகி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். இதனையடுத்து, […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊