gold medal win | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தங்கப்பதக்கம் வென்று சாதனை..!

  • Apr 29, 2026 - 09:36 AM
  • 0 Comments

சீனாவில் நடைபெற்று வரும் 6-ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில், மற்போர் (Wrestling) விளையாட்டின் பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று நிபுணி வாசனா சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் வியட்நாம் வீராங்கனை டொன் தி கிம் ஓன்ஹ்-ஐ 3-1 என்ற கணக்கில் தோற்கடித்து நிபுணி இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

sl weather today 5 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 29, 2026 - 09:32 AM
  • 0 Comments

29.04.2026 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருணாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். தென் மாகாணத்தின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்தின் சில […]

ilmenite mining | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இல்மனைட் அகழ்தல் வேலைத்திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்த திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர்..!

  • Apr 28, 2026 - 05:13 PM
  • 0 Comments

இன்றைய தினம் திருக்கோவில் பிரதேச சபைக்கு வருகை தந்த capital Metals நிறுவனத்தின் அவுஸ்திரேலியா பிராந்திய முகாமையாளர் அவர்களினாலும் நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகளினாலும் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்தல் வேலைத்திட்டத்தின் அனுமதிக்கான கோரிக்கையினை திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளரிடம் முன்வைத்திருந்தார்கள் . இதற்கு அமைவாக பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் அவர்கள் குறித்த நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளரிடம் எங்களுடைய பிரதேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயற்பாட்டிற்கும் பிரதேச சபையினால் ஆதரவு தெரிவிக்கப்பட மாட்டாது எனவும் […]

thaiyiddy vihara survey halt | Pathivu News செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தையிட்டி விகாரை விவகாரம் – எழுத்து மூல உறுதி மொழிகள் வழங்க முடியாது அதிகாரிகள் திட்டவட்டம் – காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்..!

  • Apr 28, 2026 - 05:03 PM
  • 0 Comments

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைவிடப்பட்டுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியின் காணி உறுதிகளோடு உள்ள உரிமையாளர்கள் 17 பேரினதும் காணிகளின் வரைபடத்தை கீறுவதற்கு அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு அழைக்கப்பட்டனர். அதற்காக விகாரை பகுதிக்கு வந்தவர்களை விகாரை அமைந்துள்ள பகுதிக்கு சற்று தொலைவில் பொலிஸார் வீதி சோதனை சாவடியை அமைந்து , காணி உறுதிகள் , அடையாள […]

meesalai house handover | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மீசாலை பகுதியில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு உரிமையாளரிடம் கையளிப்பு..!

  • Apr 28, 2026 - 05:00 PM
  • 0 Comments

தென்மராட்சிப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு கிராமத்தில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு இன்று செவ்வாய்க்கிழமை(28.04.2026) உரிமையாளரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில், இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, 30 வீட்டுத் திட்டங்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்திருந்தார் அந்த வருகையின்போது மீசாலை கிழக்கில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான மேற்படி வீட்டிற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்திருந்தார். இந்த நிலையிலேயே கட்டி முடிக்கப்பட்ட […]

military withdrawal temple | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நாச்சிமார் ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம்..!

  • Apr 28, 2026 - 04:38 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்திதிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். இரானும் வெளியேறியதை யாரிடமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்காது திடீரென வெளியேறியுள்ளனர். 25 வருடங்களுக்கு மேலாக குறித்த ஆலயப்பகுதியிலிருந்து நேற்று இராணுவம் வெளியேறியதை தொடர்ந்து அங்கு பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து அழித்துவிட்டு சென்றுள்ளனர்.

jollykings first place | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காரைதீவு ஜொலிக்கிங்ஸ் விளையாட்டுக்கழகம் அதிக தங்கம் வென்று முதலாமிடம்..!

  • Apr 28, 2026 - 04:31 PM
  • 0 Comments

காரைதீவு பிரதேச செயலக கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா 25.04.2026 விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில் பிரதேச செயலாளர் திரு.G.அருணண் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சிவ.ஜெகராஜன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். போட்டி நிகழ்வுகளில் ஆறு கழகங்கள் பங்குபற்றி விளையாட்டுகளில் ஈடுபட்டனர். காரைதீவு வரலாற்றில் JKSC ஜொலிக்கிங்கஸ் விளையாட்டுக் கழகம் 23 தங்கப் பதக்கம் பெற்று முதல் இடத்தை கைப்பற்றிக் கொண்டது. இரண்டாம் இடத்தை KSC காரைதீவு விளையாட்டுக் […]

bogawantalawa bus accident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பொகவந்தலாவை பஸ் விபத்தில் சிக்கி 34 மாணவர்கள் காயம்..!

  • Apr 28, 2026 - 12:44 PM
  • 0 Comments

பொகவந்தலாவ – பலாங்கொட பிரதான வீதியின் கொட்டியாக்கலை பகுதியில் இன்று (28.04.2026) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிட்டி ரைடர் பேருந்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது வங்கி ஒன்றில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 10 பேர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் காயமடைந்துள்ளதுடன், பேருந்து […]

tamil language identity | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழ் தேசிய இனத்தினுடைய மிகப்பெரிய அடையாளம் மொழி, மொழியை வளர்க்க சன சமூக நிலையங்கள் ஊக்கப் படுத்த வேண்டும்..!

  • Apr 28, 2026 - 12:27 PM
  • 0 Comments

பா. உ. ஸ்ரீதரன். கிளிநொச்சி சோரன்பாற்று சரஸ்வதி சன சமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காணொளி இணைப்பு  : https://www.facebook.com/reel/1001504999222454

chemmani excavation plan | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்..!

  • Apr 28, 2026 - 11:10 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கை நேற்று (27) ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் கட்ட அகழ்வுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அகழ்வு நடவடிக்கை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நேற்றைய அகழ்வு நடவடிக்கை பணிகள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது. நேற்று எந்தவிதமான மனித எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்படவில்லை முதற்கட்டமாக புதைகுழி அமைந்துள்ள பிரதேசத்தை தயார்ப்படுத்தும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டது. நேற்று ஆரம்பமாகியுள்ள மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளுக்கான […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊