karaitivu school cultural event | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காரைதீவு கண்ணகி அறநெறி பாடசாலையின் சித்திரை வருட கலாச்சார நிகழ்வுகள்..!

  • Apr 28, 2026 - 11:04 AM
  • 0 Comments

காரைதீவு முன்னணி கலாச்சார அமைப்பான கண்ணகி அறநெறி பாடசாலையும் விவேகானந்தா விளையாட்டு கழகமும் இணைந்து பராபவ புது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் V. தயாபரன் அவர்களின்தலைமையில்(26.04.2026) அன்று காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கபடா வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் திரு S.பாஸ்கரன் அவர்களும் சிறப்பு அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திரு P. பிரணவரூபன் மற்றும் […]

thaiyiddy tensio | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதியில் குழப்பநிலை..!

  • Apr 28, 2026 - 10:31 AM
  • 0 Comments

இன்றைய தினம்(28.04.2026)காணி அளவீடு செய்யப்படவுள்ள நிலையில் காணியின் உரிமையாளர்களிடம் பொலிசார் அடையாள அட்டைகளை கோரியமையால்‌ பதட்ட நிலமை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.   காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/4399339186945177

grenade arrest | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

முன்னாள் இராணுவ வீரர் கைக்குண்டுடன் கைது..!

  • Apr 28, 2026 - 10:17 AM
  • 0 Comments

எட்டவீரகொல்லேவ, கோன்கொல்லேவ பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று, 52 டி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் 30 ஒன்பது மி.மீ ரகத் தோட்டாக்கள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எட்டவீரகொல்லேவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எட்டவீரகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டவீரகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

maithri bribery commission | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மைத்திரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு..!

  • Apr 28, 2026 - 10:14 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (28.04.2026) இவ்வாறு அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

sl weather today 4 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • Apr 28, 2026 - 09:57 AM
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் இன்று(28.04.2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென் மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மற்றும் சப்ரகமுவ […]

sellappa obituary | Pathivu News உள்ளூர் செய்திகள் நினைவஞ்சலி புதியவை முக்கிய செய்திகள்

மீளாத துயிலில் எங்கள் தேனிசை செல்லப்பா ஐயா..!

  • Apr 28, 2026 - 09:38 AM
  • 0 Comments

விடுதலைக் காற்றின் திசையெங்கும் உன் குரலின் ஈரம் படர்ந்திருக்கிறது… நீ வெறும் பாடகன் அல்ல, எங்கள் தேசத்தின் நரம்புகளில் வேகத்தைச் செலுத்திய இசைப் போர்வீரன்! மேதகுவின் அன்பைச் சுமந்த உன் கணீர்க்குரல் ஒலிக்காத பாசறைகள் ஏது? களமுனையில் காயமுற்ற வீரனுக்கு உன் பாடல்தானே மருந்தானது! காலங்கள் கடந்து நின்றாலும் – ஈழத்து மண்ணின் வலிகளையும் மாவீரர் புகழையும் காற்றின் கைகளில் ஏற்றி வைத்தாய். யுத்தம் ஓய்ந்தாலும் உன் “தேனிசை” ஓயாது! இயற்கையின் மடியில் நீ இன்று இளைப்பாறப் […]

perarivalan lawyer | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பேரறிவாளன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார்..!

  • Apr 28, 2026 - 09:33 AM
  • 0 Comments

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பேரறிவாளன், நேற்றைய தினம்(27.04.2026) சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். சிறையிலிருந்து விடுதலையான்பின் பேரறிவாளன் பற்றிய தகவல்கள் குறைவாகவே காணப்பட்டன. இந்த நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறார். சிறைமீண்ட பின் சட்டம் பயின்று வழக்கறிஞராகியுள்ளார். எந்த நீதிமன்றத்தின் படிகளில் தனக்கான நீதிக்காக காவலர்கள் புடைசூழ 31 ஆண்டுகள் ஏறி இறங்கினாரோ அதே நீதிமன்றத்தில் […]

gold price high | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உச்சம் தொடும் தங்கத்தின் விலை; ஏக்கத்தில் தங்கப்பிரியர்கள்..!

  • Apr 27, 2026 - 02:36 PM
  • 0 Comments

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று (27.04.2026) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,725 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (27) நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 365,200 ரூபாவாக அதிகரித்துள்ளது. அதேநேரம் 24 கரட் ஒரு […]

kilinochchi lake death | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு..!

  • Apr 27, 2026 - 02:33 PM
  • 0 Comments

கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளத்தில் நேற்று (26.04.2026) பிற்பகல் மூவர் நீராடியுள்ளனர். இதன்போது, ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணி நேற்று மாலை முதல் இடம்பெற்று வந்த நிலையில், இன்று (27.04.2026) காலை 8.00 மணியளவில் இரணைமடு நன்னீர் மீனவர்களால் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இச்சம்பவத்தில் கிளிநொச்சி, ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

mp firearm threat arrest | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் – அருச்சுனா எம்.பி கைது..!

  • Apr 27, 2026 - 12:43 PM
  • 0 Comments

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊