karaitivu mullivaikkal event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காரைதீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் கஞ்சி விநியோகம்..!

  • May 14, 2026 - 09:18 AM
  • 0 Comments

தமிழின அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (13.05.2026) புதன்கிழமை மாலை காரைதீவிலும் நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு.பாஸ்கரனின் ஏற்பாட்டில் பிரதேச சபைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. முன்னதாக ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மௌன ஆத்மார்த்த அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது. இதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை […]

sl weather today 13 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 14, 2026 - 08:59 AM
  • 0 Comments

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் நீடிக்கிறது. இது அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு வெளியேறி படிப்படியாக பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் […]

al hikma college building | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை அல் ஹிக்மா கல்லூரிக்கு ரூ. 11 மில்லியன் செலவில் இரு மாடி வகுப்பறை கட்டிடம்..!

  • May 13, 2026 - 01:32 PM
  • 0 Comments

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகத்திலுள்ள அல் ஹிக்மா கல்லூரியில், இந்த ஆண்டு கிழக்கு மாகாண நிதியிலிருந்து ரூ. 11 மில்லியன் செலவில் கட்டப்படவுள்ள இரு மாடி வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மிமன ஆகியோரின் தலைமையில் நேற்று (12.05.2026) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.  

mandikai mullivaikkal kanji | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மந்திகையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்..!

  • May 13, 2026 - 01:17 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று(13.05.2026) வடமராட்சி மந்திகை சந்தை பகுதியில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் இடம்பெற்றன. இதில் முதல் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக பொது ஈகை சுடரினை மாவீரர்களின் சகோதரன் ராஜி ஏற்றிவைக்க, மலர் அஞ்சலியினை சோமஸ்கந்த குருக்கள்தனஞ்சய குருக்கள் ஆரம்பித்து வைக்க மக்களால் மெழுகு வர்த்தி ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக உப்பு கஞ்சி […]

wellawaya landslide | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

வெல்லவாயவில் பாரிய மண்சரிவு..!

  • May 13, 2026 - 12:23 PM
  • 0 Comments

மொனராகலை வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹஆரகம, உல்கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மண் மேடுகளும் பாரிய மரங்களும் வேரோடு பெயர்ந்து கீழே சரிந்து விழுந்துள்ளதை காணமுடிகிறது. இந்த நிலச்சரிவு நிலைமை குறித்து உடனடியாக ஆராய்ந்து, தேவையான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

mullivaikkal kanji | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்காலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாற்றம்..!

  • May 13, 2026 - 12:19 PM
  • 0 Comments

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் உண்டு உயிர் வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினரால் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பொதுச் சந்தை கட்டடம் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது. இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.  

ravikaran mullivaikkal kanji | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகருக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய ரவிகரன்..!

  • May 13, 2026 - 12:13 PM
  • 0 Comments

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பிராந்தியத்தில் நிலவும் நிலஆக்கிரமிப்புக்கள், விவசாயிகள் மற்றும் மீனவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்களின் வாழ்வாதார நிலமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. மேலும் இதன்போது முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் […]

bus collision accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..!

  • May 13, 2026 - 11:24 AM
  • 0 Comments

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தும் மோதி கோர விபத்து கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (13.05.2026) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அம்பலாந்தோட்டை திசையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கதிர்காமம் […]

vice chancellor removal | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்..!

  • May 13, 2026 - 09:37 AM
  • 0 Comments

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்கால நிர்வாக நடவடிக்கைகளுக்காக புதிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் இந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவிடம் ‘அத தெரண’ வினவியது. அதற்குப் பதிலளித்த அவர், இந்த […]

trump controversial map | Pathivu News புதியவை உலகம் முக்கிய செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்..!

  • May 13, 2026 - 09:29 AM
  • 0 Comments

வெனிசுலாவை அமெரிக்கக் கொடியுடன், அமெரிக்காவின் “51 வது மாநிலமாக” சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். தனது ‘Truth Social’ சமூக வலைதளக் கணக்கில் ட்ரம்ப் இந்த வரைபடத்தைப் பகிர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய கருத்து தற்போது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், தனது நாடு அமெரிக்காவின் 51 வது மாநிலமாக […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊