pon sivakumar statue remembrance | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொன்.சிவகுமாரின் சிலை அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

  • May 18, 2026 - 02:13 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள முதல் விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலை அருகில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பொன். சிவகுமாரின் சிலைக்கு மாலை அணிவித்து முள்ளிவாய்க்கால் நினைவாக பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்களில் 100 பேருக்கு அரிசிப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் […]

weerawansa case delay | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விமல்வீரவங்சவின் வழக்கு ஒத்திவைப்பு..!

  • May 18, 2026 - 01:42 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (18.05.2026) உத்தரவிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம […]

pandiruppu mullivaikkal kanji | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்..!

  • May 18, 2026 - 12:36 PM
  • 0 Comments

தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று (18.05.2026) கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பில் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் […]

eelam tamils justice call | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

17 வருடங்கள் கடந்தும் ஈழத்தமிழர்களுக்கு நீதிக்கிடைக்கவில்லை..! நிழல்கள் ரவி

  • May 18, 2026 - 12:21 PM
  • 0 Comments

யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மையின அரசின் அடக்குமுறையை எதிர்த்து சிறுபான்மையின மக்களான தமிழ் மக்கள், 30 ஆண்டுகளாக உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடினர். கடந்த 2009 மே 18 அன்று சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் அந்த யுத்தமானது […]

kurumankadu pillaiyar prayer | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் பிரார்த்தனை..!

  • May 18, 2026 - 11:39 AM
  • 0 Comments

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்றைய தினம்(18.05.2026) திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. இதில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு போரில் உயிரிழந்த மக்களுக்கு தீபமேற்றி ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

nandikadal tribute | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் அஞ்சலி..!

  • May 18, 2026 - 11:28 AM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்தார். […]

tamil area shooting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் துப்பாக்கி சூடு..!

  • May 18, 2026 - 11:12 AM
  • 0 Comments

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17.05.2026) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்தச் சோதனையை மேற்கொண்ட போது, சந்தேகநபர் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். பின்னர் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார். இதன்போது, நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]

vandarumoolai mullivaikkal remembrance | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டு வந்தாறுமூலையில் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

  • May 18, 2026 - 10:23 AM
  • 0 Comments

2009 இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(18.05.2026) மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடிச்சந்தியில் வந்தாறுமூலை இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன் போது பொதுச்சுடர், விளக்குகள் ஏற்றப்பட்டும் அகவணக்கம் செலுத்தியும் இறுதியுத்தத்தில் உயிரிழந்தவர்கள் உணர்வுபூர்வமாக மலர்தூவி நினைவுகூரப்பட்டனர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், நீர்முகபிள்ளையார் ஆலய பிரதமகுரு, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் […]

archchuna arrest claim | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்கவில் கைது செய்யப்படுவாரா ராமநாதன் அர்ச்சுனா..! அதிர்ச்சி குற்றச்சாட்டு

  • May 18, 2026 - 09:34 AM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக இலங்கையில் தாம் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறியுள்ளார். அவர் தெரிவிக்கையில், இந்தியாவில் வைத்து வெளியிட்ட கருத்துகள் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வந்திறங்கும் போது தாம் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் வெளியிட்டுள்ளார். இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரை குறித்து பேசுவது தேசத்துரோகமாக கருதப்படக்கூடும் என்பதால், தமது கருத்துகள் காரணமாக தமது குரல் நிரந்தரமாக […]

oil price increase | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலக சந்தையில் உயரும் எண்ணெய் விலை..!

  • May 18, 2026 - 09:17 AM
  • 0 Comments

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (18.05.2026) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 2.44% உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 111.7 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் புதிய விலை 108.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற நிலை மற்றும் ஐக்கிய […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊