jaffna new commissioner | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்..!

  • May 20, 2026 - 11:02 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகர ஆணையாளரான கடமையாற்றிய எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

chinese arrested katunayake | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சீனர்கள் 3 கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!

  • May 20, 2026 - 10:42 AM
  • 0 Comments

சைபர் குற்றங்களை (இணையவழி குற்றங்கள்) புரிவதற்காக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 5,140,000 ரூபாய் பெறுமதியான கைபேசிகள் மற்றும் அவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் சுங்கத்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. குறித்த கைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து, பசுமை வழித்தடம் ஊடாக வெளியேற்ற முயன்ற போதே இந்த மூன்று சீன நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது […]

sl weather today 17 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 20, 2026 - 10:36 AM
  • 0 Comments

20.05.2026 நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா […]

valaichenai awareness event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வாழைச்சேனையில் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தும் நிகழ்வு..!

  • May 19, 2026 - 11:17 AM
  • 0 Comments

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் மட்டக்களப்பு மாவட்ட விஜயத்தை முன்னிட்டு, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை (18.05.2026) கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ், “முழு நாடும் ஒன்றாக” எனும் தொனிப்பொருளில், விஷப்பொருள் தடுப்பு தேசிய செயற்பாட்டு சபையின் வழிநடத்தலில் நாடளாவிய ரீதியில் […]

digital support for cyclone victims | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திட்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கை டிஜிட்டல் அமைப்புகள் தொடக்கிவைப்பு..!

  • May 19, 2026 - 11:11 AM
  • 0 Comments

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் (NDRSC), நோர்வே அரசாங்கத்தின் நிதியுதவியுடனும், யுனிசெப் இலங்கை மற்றும் ஐ.நா. தன்னார்வலர்களின் ஆதரவுடனும், தனது புதிய டிஜிட்டல் இழப்பீட்டு முகாமைத்துவ அமைப்பு மற்றும் சமூக விசாரணைப் பொறிமுறையை நேற்றைய தினம் (18.05.2026) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. திட்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வேகமான, மேலும் வெளிப்படையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஆதரவை உறுதி செய்வதில் இது ஒரு முக்கிய […]

sme development workshop | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிறிய, நடுத்தர உற்பத்திகளை மேம்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வு..!

  • May 19, 2026 - 11:05 AM
  • 0 Comments

காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி சந்தைப்படுத்தல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் ஆளுமை விருத்தி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் நேற்று (18.05.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டது. காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் , சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி எஸ்.எப்.ஆர். பரீட், கருத்திட்ட முகாமையாளர் திருமதி கண்ணன், சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான எஸ்.எச்.எம்.முஸம்மில், ஏ.எம்.சுல்மி ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் […]

scotland peace rally | Pathivu News உள்ளூர் உலகம் புதியவை முக்கிய செய்திகள்

ஸ்காட்லாந்தில் இடம்பெற்ற அமைதி நடைப்பேரணி..!

  • May 19, 2026 - 10:00 AM
  • 0 Comments

மே 18 தமிழின அழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடுமைகளை நினைவுகூரும் முகமாக ஸ்காட்லாந்தில் நேற்றைய தினம்(18.05.2026) அமைதி நடைப்பேரணி இடம்பெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முதன் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கல்வி, கலை மற்றும் கலாச்சார அமைச்சராகிய திருமதி டாக்டர் துஷான்லி உபேந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. எமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள், தமிழ் பற்றாளர்கள், தமிழ் மக்கள் […]

uk tamil remembrance | Pathivu News உள்ளூர் உலகம் புதியவை முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாள்..!

  • May 19, 2026 - 09:42 AM
  • 0 Comments

தமிழின வரலாற்றின் மிகக் கொடூரமான இனஅழிப்பான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு நாள், மே 18, 2026 திங்கட்கிழமை பல ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களால் லண்டனில் நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வு பிற்பகல் 3.00 மணிக்கு லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் எழுச்சியுடன் ஆரம்பமாகி, இலக்கம் 10 பிரதமர் வாசஸ்தலத்தை நோக்கி கவனயீர்ப்பு பேரணியாக இடம்பெற்றது. இந்நிகழ்வை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா (TCC-UK) மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கிய இராச்சியம் இணைந்து ஏற்பாடு […]

sl weather today 16 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 19, 2026 - 09:27 AM
  • 0 Comments

19.05.2026 நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் […]

student road accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி துவிச்சக்கரவண்டியில் சென்ற மாணவன் உயிரிழப்பு..!

  • May 19, 2026 - 09:07 AM
  • 0 Comments

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவன் ஒருவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரந்தன் பகுதியில் மாணவன் ஒருவர் தனது துவிச்சக்கரவண்டியில் (வழமையான பாதையில்) பயணித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து துவிச்சக்கரவண்டி மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்குள்ளான […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊