poonakary school event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பூநகரி முன்பள்ளி மாணவர்களின் கால்கோள் விழா; நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பங்கேற்பு..!

  • May 27, 2026 - 11:17 AM
  • 0 Comments

பூநகரி முன்பள்ளி மாணவர்களுக்கான கால்கோள் நிகழ்வும் கௌரவிப்பு விழாவும் அண்மையில் (25.05.2026)பூநகரி முன்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. ​ இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். ​இதன்போது உரையாற்றிய அவர், “கல்வி என்னும் உன்னத பயணத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும் இந்த மழலைகள்தான் நம் தேசத்தின் எதிர்காலத் தூண்கள். நாம் இவர்களுக்கு வழங்கும் முறையான கல்வியும் நல்லொழுக்கமுமே, இவர்களை பட்டதாரிகளாக மாத்திரமன்றி, எதிர்காலத்தில் […]

human rights coordination meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மனித உரிமைகள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்..!

  • May 27, 2026 - 11:07 AM
  • 0 Comments

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களுடனான மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் கூட்டமானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.ரீ.பி. டெஹிடேனிய அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26.05.2026) இடம் பெற்றது. மாவட்டத்தில் நிலவும் மனித உரிமை நிலைமைகள் மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இக்கலந்துரையால் […]

canada ebola action | Pathivu News உலகம் புதியவை முக்கிய செய்திகள்

எபோலா வைரஸ் பரவல் – கனடா அதிரடி தீர்மானம்..!

  • May 27, 2026 - 10:39 AM
  • 0 Comments

எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயணத் தடையை விதிக்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் புதன்கிழமை முதல் 90 நாட்களுக்கு கனடாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எபோலா வைரஸ் கனடாவுக்குள் நுழைவதையும், அது நாட்டில் பரவுவதையும் தடுப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.   கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ‘புந்திபுக்யோ’ வகை […]

sl weather today 21 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 27, 2026 - 10:31 AM
  • 0 Comments

27.05.2026 தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில […]

sembiyanpattru church festival | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பக்திப் பரவசமாக இடம்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா..!

  • May 26, 2026 - 11:28 AM
  • 0 Comments

யாழ் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, மக்கள் வெள்ளத்தில் மிகச் சிறப்பாகவும் பக்திப் பரவசத்துடனும் நடைபெற்றது. மாலை அணிவித்து வரவேற்பு மற்றும் கூட்டுத்திருப்பலி இன்று (26.05.2026) அதிகாலை 6:00 மணியளவில் திருச்செபமாலையுடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, மாலை 6:30 மணியளவில் செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய அருட்பணி சபையினரின் சிறப்பில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆரம்பமானது. திருப்பலியின் துவக்கத்தில், வருகை […]

gunawardena court appearance | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீதிமன்றுக்கு வருகை தந்த சரண குணவர்தன..!

  • May 26, 2026 - 11:17 AM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளின் தீர்ப்பு இன்று (26.05.2026) வௌியாகவுள்ளது. அதற்காக அவர் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

kalmunai remand case | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு 14 நாட்கள் கம்பி..! -கல்முனையில் சம்பவம்

  • May 26, 2026 - 11:08 AM
  • 0 Comments

ரூபா பத்தாயிரம் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் (தன்னினச்சேர்க்கை) ஈடுபட்ட வர்த்தகருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை)செயற்பாடு இடம்பெற்று வந்துள்ளது. இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளனர்.இதன்போது அங்கு சென்ற இரு சிறுவர்களையும் வரவேற்ற குறித்த வர்த்தகர் ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை) செயற்பாட்டிற்காக ரூபா பத்தாயிரம் […]

balali police allegation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பலாலி பொலிஸார் பொய் வழக்கு தாக்கல் செய்ததாக செ.கஜேந்திரன் குற்றச்சாட்டு..!

  • May 26, 2026 - 10:44 AM
  • 0 Comments

பலாலி பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்காக  தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான வாக்குமூலம் பலாலி பொலிசாரால் பெறப்பட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 2025 டிசம்பர் 4ஆம் திகதி தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் குறித்து பலாலி பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பதிவு செய்தார்கள். அன்றையதினம் […]

illegal goods seized | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சட்டவிரோத பொருட்கள் பறிமுதல்..!

  • May 26, 2026 - 10:07 AM
  • 0 Comments

மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் படகில் கடத்துவதற்காக, வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய நபர்களை அவர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால், சமீபகாலமாக தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, சீனியப்பா தர்கா, களிமண்குண்டு, திருப்புல்லாணி மற்றும் பாம்பன் […]

sl weather today 20 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 26, 2026 - 09:59 AM
  • 0 Comments

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளின் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊