police custody death probe | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு..!

  • Jun 8, 2026 - 09:44 AM
  • 0 Comments

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் உள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படும் சிறைக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 119 இலக்க முறைப்பாட்டிற்கமைய குடும்பப் பிரச்சினை தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார். குறித்த உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் […]

valaichenai guru pooja | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வாழைச்சேனை முத்தமிழருவி அறநெறிப் பாடசாலை நடாத்திய திருஞானசம்பந்தர் குருபூசை..!

  • Jun 8, 2026 - 09:37 AM
  • 0 Comments

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை, கண்ணகிபுரம் முத்தமிழருவி அறநெறிப் பாடசாலை நடாத்திய திருஞானசம்பந்தர் குருபூசை நிகழ்வும்,மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) அறநெறிப் பாடசாலையில் இடம்பெற்றது. அறநெறிப் பாடசாலை அதிபர் சந்திரசேகரம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விசேட அதிதியாக இந்தியா காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ.மாணிக்கம் நடராஜன் கலந்து சிறப்பித்தார். அத்தோடு கண்ணகிபுரம் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு நிருபர் […]

sritharan letter president | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்…!

  • Jun 8, 2026 - 09:26 AM
  • 0 Comments

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள உதயநகர் மேற்கு, கிளிநொச்சியை நிரந்தர முகவரியாகக் கொண்ட சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அவர்களின் விடுதலை தொடர்பான விடயத்தினை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன். தனது இனத்தின் […]

kalmunai environment day | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கல்முனையில் சர்வதேச சூழல் தினம் அனுஷ்டிப்பு..!

  • Jun 5, 2026 - 04:12 PM
  • 0 Comments

சர்வதேச சூழல் தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் முதலில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் சிரமதான நிகழ்வுகள் முதலில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இன்று(05)அப்பாடசாலை அதிபர் தலைமையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவர் பல்வேறு சூழல் சார் கருத்துக்களை வழங்கினார். இதன் போது இயற்கை ஒரு மடல் எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு […]

chavakachcheri tree planting | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சாவகச்சேரியில் மரநடுகை..!

  • Jun 5, 2026 - 04:04 PM
  • 0 Comments

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2026 வெள்ளிக்கிழமை தென்மராட்சி அபிவிருத்திக் கழகமும் (Thenmaradchi Development Association) கிரீன் குளோப் (Green Globe) அமைப்பும் இணைந்து சாவகச்சேரி நகர சபையுடன் கைகோர்த்து இன்று(05.06.2026) காலை 6.30மணிக்கு தனங்கிளப்பு வீதி, கண்ணாடிப்பிட்டி இந்து மயானம் ஆகிய பகுதிகளில் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வு சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஸ் தலைமையில் , உபதவிசாளர் ஞா.கிசோர் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் என்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் Dr. […]

rupee value drop | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை ரூபாயின் பெறுமதி மறுபடியும் வீழ்ச்சி..!

  • Jun 5, 2026 - 12:00 PM
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியான வீழ்ச்சியினை இன்றும் (05.06.2026) பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.27 ரூபாயாக காணப்படுகின்றது. அதேநேரம் அதன் விற்பனை விலை 342 ரூபாவாக அமைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

mullaitivu environment day | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிப்பு..!

  • Jun 5, 2026 - 11:51 AM
  • 0 Comments

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (2026.06.05) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் “பசுமை அலுவலகம் – பசுமை சமூகம்” என்ற கருப்பொருளின் கீழ் விசேட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, காலை 9.00 மணிக்கு தேசியக் கொடியேற்றுதல் மற்றும் தேசிய கீதம் இசைத்தலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பசுமை அலுவலக உறுதிமொழி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வுறுதிமொழியின் ஊடாக தூய்மையான, பசுமையான மற்றும் […]

colombo water supply issue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் கோளாறு..!

  • Jun 5, 2026 - 11:42 AM
  • 0 Comments

கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயிலேயே இந்த திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று (05.06.2026) இரவு 8.00 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர […]

pon sivakumaran remembrance | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்..!

  • Jun 5, 2026 - 11:37 AM
  • 0 Comments

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(05.06.2026) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.  

mother daughter accident death | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விபத்தில் சிக்கிய தாயும், மகளும் அடுத்தடுத்து உயிரிழப்பு..!

  • Jun 5, 2026 - 11:24 AM
  • 0 Comments

புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும், மகளும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தாயான சமுத்ரா அலுவிஹார (வயது 52) மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது மூத்த மகளான சஜீனி மகேஷிகா (வயது 32) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். கடந்த முதலாம் திகதி இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும், முச்சக்கர […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊