2 கோடிக்கும் அதிக பணத்துடன் இருவர் கைது..!
சம்பாதித்த விதத்தை உறுதிப்படுத்த முடியாத ரூ.2 கோடியே 70 இலட்சம் பணத்துடன் பயணித்த இரு சந்தேகநபர்களை கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று (21.07.2026) மாலை, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, கார் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டிருந்த ரூ.2.70 கோடி பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. குறித்த பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் ஆவணங்களையோ அல்லது திருப்திகரமான விளக்கத்தையோ சந்தேகநபர்கள் வழங்கத் தவறியதாக […]









