easter attack investigation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் ; சிறு குழுவின் கூச்சலுக்கு அஞ்சி விசாரணையை கைவிடமாட்டோம்..!

  • Jun 10, 2026 - 11:14 AM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த முடியாது. அரசியல் இலாபங்களுக்காகப் போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் விசாரணைகள் அதன் போக்கில் நேர்மையாக முன்னோக்கி நகரும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக கொழும்பில் நடைபெற்ற உத்தியோகபூர்வ செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இதனைக் […]

pta repeal promise | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம்..! நீதி அமைச்சர் ஹர்ஷன

  • Jun 10, 2026 - 11:05 AM
  • 0 Comments

கிளிநொச்சி இளைஞன் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை. விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரணத்தால் தான் கைது செய்யப்பட்டார். பேச்சு சுதந்திரம் என்று குறிப்பிட்டுக்கொண்டு முறையற்ற வகையில் செயற்பட கூடாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றியதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை […]

anura congratulates modi | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மோடிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து..!

  • Jun 10, 2026 - 10:58 AM
  • 0 Comments

தொடர்ச்சியாக நீண்ட காலம் பதவியில் இருந்த இந்தியப் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். இன்று (10.06.2026) நிலவரப்படி, அவர் பிரதமர் பதவியில் 4,399 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார்.இந்தச் சிறப்பான தருணத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இவ்வாறு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த மைல்கல் மோடியின் நீண்டகால சேவையை மாத்திரமன்றி, உலகின் […]

provincial election update | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் நோக்கம் இல்லை..!

  • Jun 10, 2026 - 10:27 AM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10.06.2026) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மாகாண எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்று அதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியதன் பின்னரே தேர்தல் தினம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்க முடியும். தற்போதுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகள் […]

jaffna heritage at risk | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அழியும் அபாயத்தில் யாழின் முக்கிய வரலாற்று பொக்கிஷம்..! பொது மக்களுக்கு முக்கிய தகவல்

  • Jun 10, 2026 - 10:16 AM
  • 0 Comments

யாழ்ப்பாண இராச்சியத்தினுடைய சங்கிலிய மன்னனின் மந்திரி மனையின் வரலாற்றை பேணி பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நல்லூர் மந்திரிமனை அழியும் அபாயத்தில் இருந்த நிலையில் அதனை புனரமைப்பு செய்வது தொடர்பாக தற்போது நம்பிக்கை பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் […]

support persons with disabilities | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் முயற்சியிலும் வளர்ச்சியிலும் துணை நிற்போம்..! யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

  • Jun 10, 2026 - 10:10 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு நேற்றைய தினம்(09.06.2026) யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தின் இருக்கின்ற 500 ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிகரமாகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், இன்றைய […]

bharathiraja death | Pathivu News உள்ளூர் இந்தியா புதியவை முக்கிய செய்திகள்

‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா சாவடைந்தார்..!

  • Jun 10, 2026 - 10:00 AM
  • 0 Comments

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று சாவடைந்தார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார். அதுவரை பெரும்பாலும் ஸ்டூடியோவுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனைக்கும் கொண்டு சேர்த்தார். ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் […]

wanathawilluwa shooting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வனாதவில்லுவ பகுதியில் முந்திரி பறிக்கச் சென்றவர் சுட்டுக் கொலை..!

  • Jun 10, 2026 - 09:56 AM
  • 0 Comments

வனாதவில்லுவ, கரதிவ் பகுதியில் உள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வனாதவில்லுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (09.06.2026) அதிகாலை இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் கல்லடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கரதிவ் பகுதியில் உள்ள பெருந்தோட்ட நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான முந்திரித் தோட்டத்தில் முந்திரி பறிக்கச் சென்றபோது, அங்குள்ள காவலாளிகளிடம் சிக்கியுள்ளார். இதன்போது அவர்கள் அவரைத் தாக்கி, […]

sri lanka thunderstorm alert | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை..!

  • Jun 10, 2026 - 09:42 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அனுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய […]

gunawardena prison sentence | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

04ஆண்டுகள் சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை..!

  • Jun 9, 2026 - 11:11 AM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் தலா 4 ஆண்டுகள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, அந்த வழக்குகளுக்காக சரண குணவர்தனவுக்கு 18 இலட்சம் ரூபா அபராதமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். கடந்த […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp