kilinochchi ngo meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவன ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

  • May 21, 2026 - 10:33 AM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களினால் 2026 ஆம் ஆண்டு முதலாம் காலாண்டில் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மதிப்பீடும் 2026 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டு (Q2) செயல்திட்டங்கள் புதிய திட்டங்கள், இலக்குகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் குறித்தான மாவட்ட அரச சார்பற்ற நிறுவன ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட மேலதிகஅரசாங்க அதிபர் திருமதி நளாயினி இன்பராஜ் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (20.05.2026) காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் […]

former policeman drug arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு..!

  • May 21, 2026 - 10:22 AM
  • 0 Comments

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெலிகொம் அருகில் புதன்கிழமை(20) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார். 50 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 10 கிராம் 130 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் பணப்பை ,ஒரு தொகை பணம் […]

rda union action | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கிய RDA பொறியியலாளர் சங்கம்..!

  • May 21, 2026 - 10:11 AM
  • 0 Comments

சம்பள முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று (21.05.2026) முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், அங்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமை காரணமாகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.   இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் […]

sl weather today 18 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 21, 2026 - 10:00 AM
  • 0 Comments

21.05.2026 இலங்கையின் குறுக்கே தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும் அனுராதபுர மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 […]

sri shankar kalmunai visit | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ சங்கர் கள விஜயம்..!

  • May 20, 2026 - 01:25 PM
  • 0 Comments

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக(DD) கடந்த வாரம் நியமிக்கப்பட்ட மருத்துவர் பொன்னுச்சாமி ஶ்ரீசங்கர் நேற்று, டிஜிட்டல் முறையிலான வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகளை அவதானிக்க கள விஜயத்தை மேற்கொண்டார். யாழ் பல்கலைக்கழக மருத்துவ பட்டதாரியான இவர் தற்போது மருத்துவ நிர்வாக முதுமானி பட்டத்தை (MBBS,MSc.Medi.Admin). பெற்றதன் காரணமாக பிரதிப் பணிப்பாளர் பதவி உயர்வு கிடைத்தது. கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அவர் நேற்று வருகைதந்த அவர் வெளிநோயாளர்களுடனும், வைத்தியசாலை ஊழியர்களுடனும் கலந்துரையாடினார். டிஜிட்டல் வெளி நோயாளி பிரிவு பொறுப்பதிகாரி […]

livelihood aid programme | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நலிவுற்ற மக்களுக்கு 18 லட்ச ரூபாய் செலவில் வாழ்வாதார உதவிகள். நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாடு..!

  • May 20, 2026 - 12:18 PM
  • 0 Comments

நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், குடிநீர் மற்றும் மின் இணைப்புக்கான நிதியுதவிகள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (20.05.2026) புதன்கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு ​நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்றது. பிரதேச சபை பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு திட்டத்தின்கீழ், 2026ஆம் ஆண்டிற்கான நலன்புரி வேலைத்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ​ இவ் நிகழ்வில் கருத்து […]

agriculture control operation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாதீனித்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட விவசாயத்திணைக்களம்..!

  • May 20, 2026 - 11:19 AM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் பருவமழையைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு களையான பாத்தீனியம் வேகமாக பரவி வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட விவசாயத்திணைக்களம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் நேற்றையதினம் (19.05.2026) கனகாம்பிகைக்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் தொண்டமாநகர் பகுதியில் பொது நோக்கு மண்டபத்திற்கு முன்பாக A9 வீதியில் சிரமதானம் மூலம் பாத்தீனியத்தை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பாத்தீனிய அழிப்பு நடவடிக்கையில் வி.சோதிலட்சுமி கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்,பிரதீபன் (கனகாம்பிகைக்குள விவசாயபோதனாசிரியர்) ஷிவனியா (அபிவிருத்தி உத்தியோகத்தர்) மற்றும் பிரதேச […]

balali school wrestling win | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மல்யுத்த போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் சாதனை..!

  • May 20, 2026 - 10:58 AM
  • 0 Comments

மல்யுத்தம் போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 4 பதக்கங்களை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினர் 16 வயது கீழ் பிரிவு ஆண்கள் ம.ருபிஷன் மற்றும் லி.வசீகரன் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும் பா.அசோக்குமார் வெள்ளிப் பதக்கத்தையும் மற்றும் 18 வயது கீழ் […]

sammanthurai drug arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறையில் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது..!

  • May 20, 2026 - 10:53 AM
  • 0 Comments

கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை (19.05.2026) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தன்வசம் வைத்திருந்த 33 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். […]

sl weather today 16 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 19, 2026 - 09:27 AM
  • 0 Comments

19.05.2026 நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊