உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவன ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களினால் 2026 ஆம் ஆண்டு முதலாம் காலாண்டில் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மதிப்பீடும் 2026 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டு (Q2) செயல்திட்டங்கள்
புதிய திட்டங்கள், இலக்குகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் குறித்தான மாவட்ட அரச சார்பற்ற நிறுவன ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட மேலதிகஅரசாங்க அதிபர் திருமதி நளாயினி இன்பராஜ்
அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (20.05.2026) காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக ஒவ்வொரு அரசு சாரா நிறுவனங்களின் செயல் திட்டம் மற்றும் முன்னேற்றங்களின் முன்வைப்புக்கள் ஒவ்வொன்றாக விளக்கமளிக்கப்பட்டன.

2026ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் 36 எண்ணிக்கையிலான அரச சார்பற்ற நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்பட திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன் நடப்பாண்டில் அரச சார்பற்ற நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தும் செயற்திட்டங்களின் முன்வைப்புக்கள் இடம்பெற்றன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலகங்களின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள்,மாவட்ட அரச சார்பற்ற நிறுவன ஒருங்கிணைப்பாளர்,விடயத்தோடு தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள்,
வெவ்வேறு துறை சார் மாவட்ட அலுவலர்கள்,தொடர்புடைய அரச பங்குதாரர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் மாவட்டத்தின் அவசர மற்றும் அவசிய தேவைகளிற்கு முழுமையான பங்களிப்பினை வழங்கியமைக்கான நன்றியினை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தெரிவித்ததோடு அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கியப் பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியதோடு செயற்திட்டங்களின் விளைவை எவ்வாறு திறம்பட அதிகரிக்க முடியும் என்பதனையும் வலியுறுத்தியிருந்தார்.

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை