பாடகி மரியசெல் குணதிலக்க காலமானார்..!
பிரபல பாடகியான மரியசெல் குணதிலக்க இன்று (10) காலை காலமானார். திடீர் நோய் நிலைமை காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (10.07.2026) அதிகாலை அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. மறையும் போது அவருக்கு வயது 68 ஆகும்.









