kandy shooting | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கண்டி கடுகஸ்தோட்டையில் துப்பாக்கிச் சூடு..!

  • May 4, 2026 - 10:00 AM
  • 0 Comments

கண்டி – கடுகஸ்தோட்டை – குஹாகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர் கண்டி தேசிய வைத்தியசாலையின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

fishermen missing | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் இரு மீனவர்கள் மாயம்..!

  • May 4, 2026 - 09:54 AM
  • 0 Comments

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் (02.05.2026) காலை 10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றுள்ளனர். எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதேநேரம் பிரதேச மீனவர்கள் இணைந்து படகுகளில் சென்று குறித்த கடற்பகுதியில் நேற்றைய தினம் […]

sl weather today 8 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 4, 2026 - 09:35 AM
  • 0 Comments

04.05.2026 மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயில் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் […]

sellappa tribute eelam | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈழ விடுதலைக்காகத் தன் குரலால் போராடியவர் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா..!

  • May 3, 2026 - 11:16 AM
  • 0 Comments

ஜனநாயகப் போராளிகள் கட்சி என்.நகுலேஸ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் நாம் ஆயுதம் கொண்டு போராடுகையின் தன் குரலை ஆயுதமாகக் கொண்டு போராடியவர் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா. இவரின் இழப்பு தமிழ்த் தேசியத்தின் பேரிழப்பாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார். தேனிசை செல்லப்பாவின் மறைவையொட்டி நேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற புகழ் வணக்க நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தன் குரலால் எம் இனத்தின் […]

workers day message rpp | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

புரட்சிகர மக்கள் சக்தியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி..!

  • May 1, 2026 - 01:33 PM
  • 0 Comments

இலங்கை வாழ் உழைக்கும் மக்களுக்கும், குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கும் புரட்சிகர மக்கள் சக்தி சார்பாக எமது புரட்சிகர மேதின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! ​மேதினம் என்பது வெறும் விடுமுறை நாள் அல்ல; அது எமது உரிமைக்கான போர்க்குரல். ​தேயிலைச் செடிகளுக்கு இடையே தேய்ந்து போகும் மலையகத் தொழிலாளர்களின் உழைப்பு, இந்த நாட்டின் முதுகெலும்பு. ஆனால், அந்த உழைப்பிற்கு வழங்கப்படுவது வெறும் சொற்பத் தொகையே. வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற கௌரவமான ஊதியம் என்பது எமது சலுகையல்ல, […]

jaffna university food check | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் பல்கலை மாணவர்களுக்கு உணவு வழங்குவோரிடம் திடீர் சோதனை..!

  • May 1, 2026 - 01:27 PM
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு விநியோகிப்பவர்களிடம் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவுகளை வெளிநபர்கள் விநியோகித்து வருகின்றனர். உணவு வழங்குவோர் சுகாதார நடைமுறைகளை பின் பற்றுவதில்லை என முறைப்பாடுகள் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து நேற்றைய தினம் இரவு விடுதிக்கு உணவு விநியோகிக்கும் நபர்கள் , அவர்கள் விநியோகிக்கும் உணவு தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் போது , சில குறைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் […]

canadian death tamil area | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கனடா நாட்டுப் பிரஜை திடீர் மரணம்..!

  • May 1, 2026 - 11:21 AM
  • 0 Comments

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார். வவுனியா நகர் நோக்கி வாடகை வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த வாகன சாரதி, உடனடியாக அவரை பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல […]

government praised | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுகிறோம்..!

  • May 1, 2026 - 11:11 AM
  • 0 Comments

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுவதுடன் இலஞ்சம் ஊழல் என்பவற்றை தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குங்கள் என இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. தொழில் ரீதியாக தகுதிவாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற் சங்கம் மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த ஊடக வியலாளர் மாநாடு கல்முனை மயோன் பிளாஸா மண்டபத்தில் அதன் தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அண்மையில் மரணமடைந்த ஊடகவியலாளர் […]

uk terror alert | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் குறித்து முன் எச்சரிக்கை..!

  • May 1, 2026 - 10:42 AM
  • 0 Comments

பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டமானது எச்சரிக்கை நிலையில் இருந்து தீவிரம் என்ற நிலைக்கு, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று (30.04.2026) முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரு யூத இனத்தவர்கள் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் டேன் ஜார்விஸ் (Dan Jarvis) கூறுகையில், இந்த அச்சுறுத்தல் மட்ட உயர்வு லண்டன் தாக்குதலால் மாத்திரம் ஏற்பட்டதல்ல என தெரிவித்துள்ளார். இஸ்லாமிய தீவிரவாதம் […]

workers day | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்று சர்வதேச உழைப்பாளர் தினம்..!

  • May 1, 2026 - 09:48 AM
  • 0 Comments

01.05.2026 இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி, 18ம் நூற்றாண்டில் துரிதமானது. வளர்ச்சியடைந்த நாடுகளில் 24 மணிநேரத்தில் 12 முதல் 18 மணித்தியாலங்கள் வரை வேலை செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். 1886 ஆம் ஆண்டு மே […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp