வவுனியா ஓமந்தை மருதோடை கந்தசாமி கோவில் 10ஆம் நாள் தீர்த்தத்திருவிழா..!
29.07.2026
காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார். டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (28) பிற்பகல் கொழும்பிலுள்ள SEMA கட்டிட கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றதுடன், அங்கு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனை குறிப்பிட்டார். அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரசு […]
வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும் அபாயம் காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் , கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மாவிட்டபுரத்தில் இருந்து கீரிமலை செல்லும் வீதியில் , கடந்த காலங்களில் சுண்ணக்கற்கள் அகழப்பட்டு பாரிய குழிகள் காணப்படுகின்றன அவை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய கால […]
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டம் இன்று (29.07.2026) கொழும்பில் நடைபெறவுள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார். இதன்படி, இன்று காலை 11 மணிக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. “இது எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நீதிபதிக்கோ தொடர்பான பிரச்சனை அல்ல. இது நீதிமன்றத்தின் சுதந்திரம், […]
“அரும்புகள் மலரும் ஓசைகள் 2026” புதிய பாடல்கள் வெளியீடும் கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கி மதிப்பளிக்கப்படும். காலம்: 03.10.2026 நேரம்: பி ப 5.00 இடம்: tamil isai kalamanram Unit3 -1220 Tapsacott Road Scarborough,ON,M1X 1E8
தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்த மூத்த வி.சி.ஜெயமணி மாரடைப்பு காரணமாக சென்னையில் சாவடைந்தா்ர். ‘திருமதி செல்வம்’ சீரியலில், கதாநாயகன் செல்வத்தின் தந்தை ‘பூங்காவனம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர், நடிகர் வி.சி.ஜெயமணி. இது தவிர,சிறகடிக்க ஆசை, மெட்டி ஒலி, கல்யாணப் பரிசு உள்ளிட்ட பல தொடர்களிலும், 150-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிறு வயதிலேயே கலைத் துறையில் ஆர்வம் காட்டி, மேடை […]
தற்போது 9% என்ற அளவில் உள்ள மீண்டெழும் செலவீனங்களைக் குறைத்து, 4% ஆக உள்ள மூலதனச் செலவீனங்களை உயர்த்தும் நோக்கில் எதிர்வரும் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2027 ஆம் ஆண்டில் மூலதனச் செலவீனமாக இரண்டு ட்ரில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது சுமார் 40% அதிகரிப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க […]
29.07.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியமுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 – 50 […]
13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.8% ஆல் சரிவடைந்து, 81.95 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ப்ரென்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.6% ஆல் குறைவடைந்து, 87.82 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (27.07.2026) வரையில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 82,838 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 27,464 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகி வருகின்றனர். இது சதவீத அடிப்படையில் 21.25% ஆகும். […]