kombayan main canal restoration | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

கோம்பயன் மணல் இந்து மயானத்தின் முன்பாக உள்ள பிரதான வாய்க்கால் புனரமைப்பு..!

  • Jul 31, 2026 - 09:37 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள கோம்பயன் மணல் இந்து மயானத்தின் முன்பாக உள்ள பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாநகரசபை உறுப்பினர் சேதுகாவலர் மதுசிகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்; நல்லூர், கொக்குவில், கோண்டாவில் மற்றும் யாழ் நகரின் பல பகுதிகளிலிருந்தும் வரும் மழைநீர் நாச்சிமார் கோவில் குளம், வண்ணான் குளம் பகுதி ஊடாக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு முன்னால் அமைந்துள்ள குளத்தையும், மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பாலத்துடன் […]

peaceful protest seeks justice for chemmani victims | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணி சித்துப்பாத்தியில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரிய அமைதிவழி போராட்டம்..!

  • Jul 30, 2026 - 10:38 AM
  • 0 Comments

இன்றைய தினம்(30.07.2026) அரியாலை புனித யூதாததேய சுருபம் முன்பாக இடம்பெற்றது.   காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/37308276935482670

dental service delays in chavakachcheri | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரியில் பல் மருத்துவசேவையில் இழுத்தடிப்பு;நோயாளர்கள் அவதி..!

  • Jul 30, 2026 - 10:27 AM
  • 0 Comments

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இவ்வருட ஆரம்பத்தில் 10நிமிடங்களில் கிடைத்த பல் மருத்துவசேவை தற்போது 20தினங்கள் தள்ளிப்போவது ஏன்? அன்று காலை(22/07/2026) 10 மணி இருக்கும். சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் பற் சிகிச்சை பிரிவு வழமைக்கு மாறாக அமைதியாகக் காட்சிளித்தது. ​பொதுவாக, அங்கு சென்றால் குறைந்தது 25-30 பேராவது வரிசையில் காத்திருப்பார்கள். ஆனால், அன்று அங்கு இருந்தது வெறுமனே 5 அல்லது 6 பேர் மட்டுமே! அவர்களிலும் சிலர் சிறுவர்களாக இருந்தமையால் அவர்களை அழைத்து வந்த பெற்றோருமாகவே இருந்தனர். […]

over 84000 dengue cases reported | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

84 ஆயிரத்திற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம்..!

  • Jul 30, 2026 - 10:23 AM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 84,000-ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் 84,091 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது

guru purnima at batticaloa ramakrishna mission | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலில் ”குரு பூர்ணிமா” தினம்..!

  • Jul 30, 2026 - 10:18 AM
  • 0 Comments

குரு பூர்ணிமா தினம் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலில் மிகச் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. ஆன்மீக வாழ்வில் உயர்வினை நல்கும் “குரு பூர்ணிமா” நிகழ்வானது மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் மஹராஜ் தலைமையில் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் உள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோவிலில் நேற்றைய தினம் (29.07.2026) திகதி மிகச் சிறப்பாக இடம்பெற்றது. காலை 07.00 மணி முதல் விசேட நைவேத்தியம் மற்றும் அர்ச்சனை, பஜனை, குரு பூர்ணிமா தின உரைகள், இல்ல மாணவர்களின் […]

why family structures are declining | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குடும்பக் கட்டமைப்பில் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான்..!

  • Jul 30, 2026 - 09:55 AM
  • 0 Comments

தற்போதைய சமூகத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளதன் காரணமாக குடும்பக் கட்டமைப்பு மற்றும் மனித உறவுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கின்றார். திறந்த சந்தைப் பொருளாதாரம் இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு சமூகத்திற்குள் நுகர்வுவாதம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் மூலம் மக்கள் மத்தியில் செயற்கையான ஆசைகளை உருவாக்கி பணம் சம்பாதிப்பதுவே இன்று சமூகத்தை இயக்கும் பிரதான காரணியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சீதுவை பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் […]

thanthamalai sri murugan temple theerthotsavam | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்..!

  • Jul 30, 2026 - 09:50 AM
  • 0 Comments

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 30 ஆம் திகதி இன்று வெகுவிமர்சையாக நிறைவு பெற்றது. கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பக்தர்களால் “சின்னக் கதிர்காமம்” எனப் போற்றி வழிபடப்படுவதுமான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 09.07.2026 திகதி திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21 நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று இன்று காலை தீர்த்தோற்சவத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இன்று அதிகாலை வேளையில் மூல மூர்த்திக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு, சுண்னம் இடித்ததைத் தொடர்ந்து, […]

dehiwala police si arrested with drugs | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

தெஹிவளை பொலிஸ் SI போதைப்பொருளுடன் கைது..!

  • Jul 30, 2026 - 09:42 AM
  • 0 Comments

தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர் போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது. குறித்த உப பொலிஸ் பரிசோதகர் 26 வயதுடையவர் என்பதுடன், சந்தேகநபரைக் […]

palitha bandara wins discus silver | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் வௌ்ளிப் பதக்கத்தை கைப்பற்றிய பாலித்த பண்டார..!

  • Jul 30, 2026 - 09:38 AM
  • 0 Comments

கிளாஸ்கோவில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் இலங்கையின் பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இறுதிப் போட்டியில் 46.84 மீற்றர் தூரத்திற்கு பரிதி வட்டத்தை எறிந்த பண்டார, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சர்வதேச அரங்கில் சிறப்பானதொரு திறமையை வெளிப்படுத்தியுள்ளதுடன் இது அவரது தனிப்பட்ட சிறந்த பதிவாகவும் அமைந்துள்ளது.

sri lanka weather today 20 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • Jul 30, 2026 - 09:34 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (30) மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊