vithiya case | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வித்தியா:கொலையாளிகளிற்கு விடுதலையில்லை..!

  • May 7, 2026 - 09:49 AM
  • 0 Comments

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் படுகொலை வழக்கில், குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இன்று புதன்கிழமை அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. ‘சுவிஸ் குமார்’ என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்ட நான்கு பிரதான குற்றவாளிகளுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.யாழ்ப்பாணம் சுற்றுலா தண்டனைக்கு எதிராகக் குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் குழாம் நிராகரித்தது. வழக்கில் தொடர்புடைய ஏனைய இரண்டு குற்றவாளிகளின் […]

ravikaran justice call | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பன்னாடுகளிடம் தமிழினப்படுகொலைக்கான நீதியைக் கோரியுள்ள ரவிகரன் எம்பி..!

  • May 7, 2026 - 09:38 AM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் தமிழ் படுகொலை இடம்பெற்று 17ஆண்டுகள் ஆகியுள்ளபோதும், இதுவரை நீதி கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பன்னாடுகளிடம் தமிழினப்படுகொலைக்கான நீதியைக் கோரியுள்ளார். அதேளை இறுதிக்கட்ட போர்க்காலப்பகுதியில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டநிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கவேண்டுமெனவும், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.Politics நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலத்தின் […]

lost wallet | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பணப்பை ஆவணங்களுடன் தவறவிடப்பட்டுள்ளது. கண்டெடுத்தவர்கள் வழங்கி உதவுங்கள்..!

  • May 6, 2026 - 12:06 PM
  • 0 Comments

திருகோணமலை, 7ம் வட்டாரம் , சல்லியினைச் சேர்ந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவரது பணப்பை (03.05.2026) முக்கிய ஆவணங்களுடன் இரவு ஆண்டான்குளம் வயலுக்கு சென்று வரும் வழியில் தவறவிடப்பட்டுள்ளது. எனவே கண்டெடுத்த நபர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி அதனை வழங்கி உதவுங்கள். தொடர்புகளுக்கு :- 0752018650 – உதயகுமார் 0756958596 – கமலாதேவி (கண்டெடுத்து வழங்கி உதவுபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.)

maldives president return | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாடு திரும்பினார் மாலைத்தீவு ஜனாதிபதி..!

  • May 6, 2026 - 11:49 AM
  • 0 Comments

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முயிசு, இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

obscene content arrest ampara | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆபாச படங்கள்; இணையத்தில் பதிவிட்ட அம்பாறை இளைஞன் கைது..!

  • May 5, 2026 - 01:36 PM
  • 0 Comments

கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அம்பாறை சேர்ந்த இந்தச் சந்தேகநபர், பிபில பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் பெண்களுடன் நட்பாகப் பழகி, பின்னர் அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் Edit செய்து, அவற்றைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். […]

school bus accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து..!

  • May 5, 2026 - 01:28 PM
  • 0 Comments

நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, நாவலப்பிட்டி திஸ்பனே சந்தி பகுதியில் இன்று (05.05.2026) காலை 7.00 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 13 பாடசாலை மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேனின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

karaitivu vinayagar sangabhishekam | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற நந்தவன சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகம்..!

  • May 5, 2026 - 01:21 PM
  • 0 Comments

கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம் இன்று 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவாகம வித்யா பூஷணம்,சிவாச்சார்ய திலகம், விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஷ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மகா சங்காபிஷேக கிரியைகளை நடாத்தினார்கள். ஆலய தர்மகர்த்தாக்களான இரா.திருநாவுக்கரசு கே.ஜெகமோகன் மற்றும் மா.சிதம்பரநாதன் எம்.ரவீந்திரன் உள்ளிட்ட பரிபாலன சபையினர் மற்றும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

service awards event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பணி நயப்பு விழாவில் எழுவருக்கு கௌரவம்..!

  • May 5, 2026 - 11:47 AM
  • 0 Comments

வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பணி நயப்பு விழா ஆலயத் தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை(01.05.2026) நடைபெற்றது. ஆலய இருப்பு மற்றும் கட்டுமான பணிகள், சமய ஆன்மீக வளர்ச்சிக்கும், பாரம்பரிய கலை கலாச்சார ஊடக சேவை மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்த எழுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். ஆலய அலங்கார உற்சவத்தை சிறப்பாக செய்த சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள்- மீனாட்சி அலங்கார பூஷணம், சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் […]

prison death arrests | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிறைக்கைதி உயிரிழப்பு: மூன்று சிறைக்காவலர்கள் கைது..!

  • May 5, 2026 - 11:12 AM
  • 0 Comments

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார். உயிரிழந்த கைதி கடந்த 3ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையின் துப்புரவுப் பணிகளின் போது தப்பிச் சென்றிருந்ததுடன், அதன் போது சிறைச்சாலை அதிகாரிகளால் மீண்டும் பொறுப்பேற்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் குறித்த கைதி […]

neelakam protest support | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

“நீலகாமம்” போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவு: சிறீதரன் எம்.பி. உறுதி..!

  • May 4, 2026 - 02:52 PM
  • 0 Comments

​“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்திற்கு எமது முழுமையான பங்களிப்பை வழங்குவோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ​நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட மலையகத் தலைமைகளின் ஒருங்கிணைப்பில் கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ​”மலையகம் நீலகாமம் தோட்டத்தில் அட்டூழியக் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊