பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்று..!
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று (23.03.2026) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை வெள்ளை டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், பேருந்து கட்டண திருத்த சூத்திரத்தின்படி தற்போதைய கட்டணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, புதிய கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருண்டா குறிப்பிட்டார். எவ்வாறாயினும், பேருந்து […]









