உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சிறுமி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு பலி..!

மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமியொருவர் நேற்று (19.03.2026) நண்பகல் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியாவார்.

அவர் தனது பாட்டியுடன் குறித்த குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கிராமவாசிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து குளத்தில் தேடுதல் நடத்திய போது, முதலை அச்சிறுமியை விட்டுவிட்டுச் சென்றுள்ளது.

எனினும், குறித்த சிறுமி மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்