உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்ட ஐ.நா பிரதிநிதி..!

  • Mar 27, 2026 - 10:12 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீர வீராங்கனைகளுடன் தானும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் . அத்துடன் வீர வீராங்கனைகள் எதிர்நோக்கு சவால்கள் , பிரச்சனைகள் தொடர்பில் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 27, 2026 - 09:21 AM
  • 0 Comments

27.03.2026 சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும். மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி விற்பனை கூடம்..!

  • Mar 26, 2026 - 12:27 PM
  • 0 Comments

மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக்கண்காட்சி புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சிவகுமாரி அவர்களின் ஏற்பாட்டில் இன்று (26.03.2026) இடம் பெற்றது. இக்கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் விற்பனை கண்காட்சியை பார்வையிட வந்ததுடன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பொருட்களையும் ஆர்வத்துடன் கொள்வனவு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் இடமாற்றம் வேண்டாம்..!

  • Mar 26, 2026 - 12:14 PM
  • 0 Comments

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் தம்மை பழைய நிலையங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் வடமாகாண பொது சேவை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை(26.03.2026) சில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்ட சில ஆசிரியர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மேன் முறையீடுகள் செய்துள்ளனர். இதனால் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் , வருடா வருடம் இடமாற்ற சபையால் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் […]

ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாசத்தை வென்ற தேசப்பற்று..!

  • Mar 26, 2026 - 11:09 AM
  • 0 Comments

நான் வீட்டுக்கு போகிறதே இல்லை, என்னுடைய தம்பி செத்த பிறகு அம்மாவினுடைய முகத்தைப் பார்க்கவே எனக்கு கஸ்ரமாக இருக்கும். நாங்கள் இரட்டைக் குழந்தைகள், என்னை மாதிரியே அவனும் இருப்பான். நாங்கள் நான்கு பெடியன்கள், இரண்டு தங்கைகள். என்னுடைய மூத்த அண்ணன் எம் மண்ணில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்த நேரம் எங்கோ காணாமல் போய் விட்டான். ஏதோவொரு காட்டில் இராணுவத்தினரால் அவன் கொல்லப்பட்டிருக்கலாம். அதன் பின் நானும் எனது மற்ற அண்ணனும் இயக்கத்திற்கு சென்று விட்டோம், அப்போது தம்பிதான் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வராத அதிபர், ஆசிரியர்களுக்கு விசாரணை..!

  • Mar 26, 2026 - 11:04 AM
  • 0 Comments

கடந்த மார்ச் 15ஆம் திகதி தங்காலை நகர மண்டபத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்துகொள்ளாமை தொடர்பாக தங்காலை வலயக் கல்வி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வலயக் கல்வி அலுவலகத்தினால் முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும், கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, தங்காலை வலயக் கல்விப் பணிப்பாளர் அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் உத்தியோகபூர்வ கடிதங்களை அனுப்பியுள்ளார். குறித்த கூட்டத்திற்கு ஆசிரியர்கள் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது..!

  • Mar 26, 2026 - 10:23 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் 57 போதை மாத்திரைகளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரை பாவனை அதிகமாக காணப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , பொலிஸார் மேற்கொண்ட வ விசேட நடவடிக்கையின் போதே , ஐந்து இளைஞர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் , அவர்களிடம் இருந்து 57 போதை மாத்திரைகளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை..!

  • Mar 26, 2026 - 10:19 AM
  • 0 Comments

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தெஹ்ரானுக்கு எண்ணம் இல்லை என்றும், ஈரான் தொடர்ந்து போரிடும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மீண்டும் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு, எதிர்ப்பைத் தொடர்வதே எங்கள் கொள்கை என அராக்சி அரசு தொலைக்காட்சியில் கூறினார். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை.இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மேலும் எங்கள் நிலைப்பாடு முற்றிலும் கொள்கை ரீதியானது என்று நான் நம்புகிறேன். இப்போது பேச்சுவார்த்தை பற்றிப் பேசுவது தோல்வியை ஒப்புக்கொள்வதாகும் என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்க […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறியது..!

  • Mar 26, 2026 - 09:37 AM
  • 0 Comments

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, சந்தையில் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சந்தையில் நுகர்வோர் அநீதிக்குள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சில வர்த்தகர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மறைத்து வைப்பதன் மூலம் சந்தையில் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கவும், பொருட்களின் விலைகளை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பொலிசார் நினைத்தவுடன் கைது செய்ய முடியாது..!

  • Mar 26, 2026 - 09:27 AM
  • 0 Comments

பொலிஸ்மா அதிபரின் அதிரடி உத்தரவு சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார். அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டப்பிரிவுகளின்படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை மூலம் போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp