e0ae95e0aebfe0aeb3e0af80e0aea9e0af8d e0ae9ae0aebfe0aeb1e0aebfe0aeb2e0ae99e0af8de0ae95e0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeaee0af81e0aea4 | Pathivu News செய்திகள்

கிளீன் சிறிலங்காவில் முதலில் தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்ய வேண்டும் -யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

  • Jan 6, 2025 - 04:14 PM
  • 0 Comments

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் அரசு முதலில் தன் மீது பதிந்துள்ள தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறிலங்காவின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு – கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இன்று (06) யாழ் பல்கலைக்கழக முன்றலில் […]

e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0aeaee0af88e0aeaae0af8de0aeaae0af81 e0ae89e0aeb0e0af81e0aeb5e0aebe | Pathivu News செய்திகள்

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தாமதமடையக்கூடாது – கர்தினால் மல்கம் ரஞ்சித்

  • Jan 6, 2025 - 01:40 PM
  • 0 Comments

நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் தனது பதவிக்காலம் முடிவடையும் வரை காத்திருக்காமல் புதியஅரசமைப்பினை உருவாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

e0aeaee0aebfe0aea9e0aeb1e0aeb2e0af8d e0aea4e0aea3e0af8de0aea3e0af80e0aeb0e0af8d e0aeaae0af8be0aea4e0af8de0aea4e0aeb2e0af81e0ae9fe0aea9 | Pathivu News செய்திகள்

மினறல் தண்ணீர் போத்தலுடன் DTNA இன் உயர்மட்ட குழுக் கூட்டம் நடைப்பெற்றது

  • Jan 5, 2025 - 07:02 PM
  • 0 Comments

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளத்தில் இன்று (05) நடைபெற்றது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடியுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை சந்திக்கும் விதம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது இந்த கலந்துரையாடலில் பராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களான […]

e0ae9ce0af86e0aea9e0aebfe0aeb5e0aebe e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0ae9ae0af8de0ae9ae0aebee0ae9fe0af8de0ae9fe0af81e0ae95e0af8de0ae95 | Pathivu News செய்திகள்

ஜெனிவா குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திர குழு நியமிக்கப்படவுள்ளது

  • Jan 5, 2025 - 06:50 PM
  • 0 Comments

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிகப்பதற்கு விசேட குழு அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜேவிபி அரசு […]

e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae85 | Pathivu News செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மக்கள் அச்சமுற தேவையில்லை யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் பொலிஸ் மா அதிபர்

  • Jan 5, 2025 - 06:40 PM
  • 0 Comments

சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ் நகரில் புத்தாண்டிக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில் கடந்த வாரத்தில் யாழ் நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு […]

e0aeb5e0ae9fe0aebfe0aeb5e0af87e0aeb2e0af8d e0aeaae0aebee0aea3e0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0ae95e0aebfe0aea3e0aeb1e0af81 e0ae95 | Pathivu News செய்திகள்

வடிவேல் பாணியில் கிணறு காணாமல் போனது போல நெடுந்தாரகை படகின் நங்கூரத்தை காணவில்லை!

  • Jan 4, 2025 - 10:59 AM
  • 0 Comments

நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் நேற்று (03) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் போது படகின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நெடுந்தீவின் மற்றொரு பகுதியில் தரித்து நிறுத்துவதற்காக இந்த படகு கொண்டு செல்லப்பட்டது. இதன்போதே நங்கூரம் கடலில் காணாமல்போயுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெடுந்தாரகைப் படகானது குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு வரையான பயணிகள் போக்குவரத்து சேவைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0aebee0ae9ae0af8de0ae9ae0aebf e0aeb5e0aebfe0aeaae0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0ae89e0aeafe0aebf | Pathivu News செய்திகள்

கிளிநாச்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம்

  • Jan 3, 2025 - 07:10 PM
  • 0 Comments

கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது நீங்கள் அறிந்ததே இந் நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று (02) உயிரிழந்தார். குறித்த குழந்தையின் இறுதிக் கிரியைகள் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற நிலையில், இன்றைய தினம் 34 வயதுடைய குறித்த குடும்பப் பெண்ணின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது. குடும்பத் தலைவரும் மற்றொரு மகனும் தொடர்ந்தும் சிகிச்சை […]

e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0af81 e0aeaee0af81e0aeb3e0af8de0aeb3e0aebfe0aeafe0aeb5e0aeb3e0af88 | Pathivu News செய்திகள்

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

  • Jan 3, 2025 - 02:53 PM
  • 0 Comments

வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், மற்றும் பெற்றோர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதிபர் மீதான குற்றச்சாட்டு முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர் கல்லூரியின் வளர்ச்சியை சீர்குலைக்கின்றார் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றார். 83 ஆசிரியர்களாக இருந்த ஆசரியர்களின் எண்ணி;ககையை 63 ஆக குறைத்தார் பாடசாலையின் ஏனைய ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலையின் அகச்சூழல் சீரின்றியும், பாதுகாப்பின்றியும் உள்ளது. […]

e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aeaee0ae9fe0af8de0ae9fe0af81e0aeaee0af8d e0ae89 | Pathivu News செய்திகள்

கிளிநொச்சியில் மட்டும் உண்மை முகம் காட்டும் பொலிஸ் பயங்கரவாதம்

  • Jan 3, 2025 - 02:26 PM
  • 0 Comments

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று வியாழக்கிழமை (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் குறித்த கையெழுத்துப் போராட்டம் மேற்கொள்ள தயாராக இருந்தது. இதன் போது அங்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் அனுமதி பெற்று கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவித்து போராட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக […]

e0ae9ae0aebfe0aeb1e0af88 e0ae95e0af88e0aea4e0aebfe0ae95e0aeb3e0af8d e0aeaae0af81e0aeb2e0aeaee0af8de0aeaae0af86e0aeafe0aeb0e0af8d | Pathivu News செய்திகள்

சிறை கைதிகள்,புலம்பெயர் தொழிலாளர்களின்,வாக்குரிமை உறுதி செய்ய வேண்டும்- தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

  • Jan 2, 2025 - 06:26 PM
  • 0 Comments

வெளிநாடுகளுக்கு புலம்பெயரந்து சென்றவர்கள் மற்றும் தொழில் நிமித்தம் ; சென்றவர்கள் அத்துடன் நாட்டில் உள்ள சிறைக் கைதிகள் ஆகியோரின் வாக்குரிமையை உறுதி செய்யுறுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏலவே இது தொடர்பில் உத்தியோக பூர்வமான கடிதமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி மீண்டும் கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp