உலகம்

நேபாளத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • Jan 7, 2025 - 09:54 AM
  • 0 Comments

நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. {{CODE1}} நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ள நிலையில் இதனை தொடர்ந்துஇ இந்தியாவின் புதுடில்லிஇ […]

உள்ளூர் செய்திகள்

யாழில் தவற விடப்பட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவரை கட்டிவைத்து தாக்கிய கும்பல்.!!!

  • Jan 6, 2025 - 11:17 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்தவர் கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழுவொன்று அவரை கட்டிவைத்து தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அத்தோடு, தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில், ‘உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு சென்ற நிலையில் நிலத்தில் தங்க நகை போன்ற ஆபரணம் இருப்பதை அவதானித்தேன். […]

செய்திகள்

சிங்களப் பெண்ணும் தமிழ் பெண்களும் இணைந்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

  • Jan 6, 2025 - 09:33 PM
  • 0 Comments

ரஸ்சிய இராணுவத்தில் வலிந்து இணைக்கப்படட உறவுகளை மீடக கோரியே சிங்கள பெண் ஒருவரும் தமிழ் பெண்கள் இருவரும் இணைந்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர் ரஸ்சிய்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும், வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ரஸ்சிய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் தாய்மாரும், கொழும்பு வென்னப்புவவைச் சேர்ந்த தாயொருவரும் இணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் […]

செய்திகள்

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் உள்ள நிதி நிறுவனங்களின் அடாவடி தொடர்கின்றது

  • Jan 6, 2025 - 01:22 PM
  • 0 Comments

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தாக்க முனைந்த சம்வம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்த நிதி நிறுவனத்தில் தான் அடகு வைத்த நகைகளை மீட்க சென்ற நபரை நோக்கி அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை தாக்குவதற்கும் முற்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நபரொருவர் தனது தேவைகளுக்காக […]

உள்ளூர் செய்திகள்

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது!

  • Jan 6, 2025 - 12:45 AM
  • 0 Comments

அம்பாறை தமன வனகமுவ பிரதேசத்தில் தொலைபேசி விற்பனை செய்யும் இடம் என்ற போர்வையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் நிலையமாக இயங்கி வந்த வீடொன்று நேற்று (5) அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டு மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் 29, 20 மற்றும் 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். போலி நாணயத்தாள்களை அச்சடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி உட்பட பல உபகரணங்கள் பொலிஸாரால் […]

செய்திகள்

மட்டக்களப்பில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்?

  • Jan 4, 2025 - 01:44 PM
  • 0 Comments

மட்டக்களப்பு – வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று (04) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது. இதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்த்துள்ளனர் பின் அது தொடர்பில் பொலிஸாhருக்கு தெரிவித்துள்ளனர்

செய்திகள்

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தின் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

  • Jan 4, 2025 - 11:49 AM
  • 0 Comments

இந்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தின ஆலயத்தில் அமைந்துள்ள கேணியை துப்புரவாக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது நீர் இறைக்கும் மோட்டரில் மின்கசிவு ஏற்பட்டமையால் 45 வயதுடைய குடும்பஸ்த்தர் படுகாயமடைந்துள்ளார். அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் ; சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் இலங்கைக்கு எச்சரிக்கை

  • Jan 3, 2025 - 03:34 PM
  • 0 Comments

சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமை குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னர் மேலதிக தகவல்களை பொதுமக்களிற்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

செய்திகள்

நேபாள பிரதமரும் ரணில் விக்ரமசிங்கவும் சந்திப்பு!

  • Jan 2, 2025 - 04:14 PM
  • 0 Comments

நேபாளத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியை சந்தித்து கலந்துரையாடினார் இந்த சந்திப்பானது பலுவத்தாரில் அமைந்துள்ள நேபாள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, நேபாள-இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பயணமாக டிசம்பர் 28 ஆம் திகதி நேபாளம் சென்றடைந்த ரயில் விண்ரமசிங்க, இன்று நாடு திரும்பவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

செய்திகள்

2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

  • Dec 31, 2024 - 09:35 PM
  • 0 Comments

2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக கடந்த நவம்பர் 25ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இம்மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp