இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)26.12.2024
ஆழி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு! கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குழப்பம் சுனாமியால் காவுகொள்ளப்பட்டோருக்கான நினைவேந்தல் – முல்லைதீவு https://youtu.be/XuD2EORwub4
ஆழி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு! கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குழப்பம் சுனாமியால் காவுகொள்ளப்பட்டோருக்கான நினைவேந்தல் – முல்லைதீவு https://youtu.be/XuD2EORwub4
இலங்கை உட்பட பல நாடுகளில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்த சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த பெரும் சோகத்தில் உயிரிழந்த நாட்டு மக்கள் இன்று நாடளாவிய ரீதியில் நினைவுகூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டனர் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட ஆழிப்பேரலையால், பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரின் உயிர்கள் காவு வாங்கப்பட்டன. காலை 6.58 […]
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில்; கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது கூட்டத்தில் அனுமதியின்றி நுழைந்த நபரொருவருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் உண்டான வாக்குவதாம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் சந்திரசேகரன் தலையீடு செய்து கூட்டத்தை அமைதி நிலைக்கு கொண்டு வந்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், வடமாகாண ஆளுநர் வேதநாயகன் இணைத் தலைமையில் இன்று காலை ஆரம்பமான கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், […]
ஆழிப்பேரலையால் அடித்துச்செல்லப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) காலை 8.05 மணியளவில் புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக நினைவுகூறப்பட்டது வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள , புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். நினைவு தூபிக்கு […]
மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் […]
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பலியான அதே வேளை குழந்தையின் தாய் தந்தை மற்றும் சகோதரனும் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்த மூவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (25) இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மது போதையில் ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி விப்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது விபத்து தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்
2005 தொடக்கம் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதயில் ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க உறுதிப்படுத்தினார். இதற்கமைய குருநாகல் மாவட்ட உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த, பியல் நிசாந்த ஆகியோர் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது […]
கிறிஸ்மஸ் தினத்தையிட்டு இன்று (25) மட்டக்களப்பு சிறைச்சாலையிலதண்டனை அனுபவித்த 12 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்ற இந்த 12 பேருக்கும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் 2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான பீஸ் ஆர்க் என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார். பீஸ் ஆர்க் என்ற இந்த கப்பல் டிசம்பர் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 2024 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 வரை இலங்கையில் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகளைகளை வழங்குகின்றார்கள் இதன் ஊடாக இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கும் பொது […]
அமைச்சரவை உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுவுக்கான சட்டமூலத்தை தயாரிக்க அனுமதியளித்துள்ளது திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.