செய்திகள்

வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் கைது அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டில்

  • Jan 21, 2025 - 04:18 PM
  • 0 Comments

அரச காணிக்கான போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் என வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் […]

செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தும்- பிமல் ரத்நாயக்க

  • Jan 21, 2025 - 03:51 PM
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது அரசாங்கத்தின் கொள்கையின் ஒரு பகுதியில்லை. அது அரசாங்கத்தின் அபிலாசையும் இல்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எனினும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை அவதானமாக பயன்படுத்துவோம் என நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்  

முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 2 பேர் உயிரிழப்பு 15 மாவட்டங்கள் பாதிப்பு

  • Jan 21, 2025 - 07:16 AM
  • 0 Comments

அத்துடன் 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த […]

உலகம்

அமெரிக்கவுக்கு இன்று விடுதலை நாள்- புதிய ஜனாதிபதி டிரம்ப்

  • Jan 21, 2025 - 06:42 AM
  • 0 Comments

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். இதன்பின்னர் பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், ஜனவரி 20-ஆம் தேதி தான் அமெரிக்கவுக்கு விடுதலை நாள். அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பமாகியுள்ளது .உலகம் மதிக்கப்படும் அமெரிக்கா மாறும். இதுவரை இல்லாத அமெரிக்காவைக் கட்டமைப்பேன் என்னுடைய உயிர் ஒரு காரணத்திற்காகவே காக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சிறந்ததாக மாற்றுவதற்காகவே கடவுள் என்னுடைய உயிரை காப்பாற்றியுள்ளார்.’ என்றார். எனது வெற்றி அமெரிக்கா முழுமைக்கும் ஆனது. அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். அமெரிக்காவுக்கே முதலில் முன்னுரிமை என்பதைச் செயல்படுத்துவேன். […]

முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் இன்று கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்

  • Jan 21, 2025 - 05:56 AM
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

கூலி தொழில் சுத்திகரிப்பு தொழில் போன்று வேடமிட்டது தொடர்பில் விளக்கம் கொடுத்துள்ளோம்- வடமாகாண பட்டதாரிகள்

  • Jan 21, 2025 - 05:19 AM
  • 0 Comments

யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனஈர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். இதன் பொழுது வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும், படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம், பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரியோசனம் என்றவாறு பல கோஷங்களை எழுப்பிய வண்ணம் உலகதழிராய்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ் நகரினூடாக ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் […]

முக்கிய செய்திகள்

யாழில் தமிழ்மொழி 3வது இடத்தில் இருப்பதால் அதிர்ச்சியுற்றேன் – அமைச்சர் சந்திரசேகரன்

  • Jan 20, 2025 - 03:51 PM
  • 0 Comments

யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசாரம் மையம் […]

முக்கிய செய்திகள்

யாழில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

  • Jan 20, 2025 - 03:26 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஈழத் தமிழர்களின் கலாசார பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து வளர்ப்பதனை நோக்கமாக கொண்டு இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்தக் கலாசார மையம் தமிழ் மக்களின் அடையாளமாக தற்போது காணப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் […]

செய்திகள்

தொடரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின

  • Jan 20, 2025 - 02:50 PM
  • 0 Comments

தொடரூந்து சாரதிகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தர பதவி உயர்வு பரீட்சை காரணமாக மூன்று நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் வழமை போன்று இயங்கும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் பரீட்சைக்கு தயார்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வரை பல தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. எவ்வாறாயினும், நேற்றைய தினம் பிற்பகல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவில்லை என தொடரூந்து திணைக்களம் மேலும் […]

முக்கிய செய்திகள்

மன்னாரில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

  • Jan 20, 2025 - 02:43 PM
  • 0 Comments

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு தொடரூந்து கடவைக்கருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று (20) மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp