செய்திகள்

மட்டக்களப்பில் 12 கைதிகள் விடுதலை

  • Dec 25, 2024 - 01:09 PM
  • 0 Comments

கிறிஸ்மஸ் தினத்தையிட்டு இன்று (25) மட்டக்களப்பு சிறைச்சாலையிலதண்டனை அனுபவித்த 12 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்ற இந்த 12 பேருக்கும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

செய்திகள்

சீனக் கப்பலில் சிகிச்சை பெற்றவர்களை பார்வையிட்ட பிரதமர் ஹரிணி பார்வையிட்டார்

  • Dec 25, 2024 - 12:37 PM
  • 0 Comments

சீனாவின் 2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான பீஸ் ஆர்க் என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார். பீஸ் ஆர்க் என்ற இந்த கப்பல் டிசம்பர் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 2024 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 வரை இலங்கையில் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகளைகளை வழங்குகின்றார்கள் இதன் ஊடாக இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கும் பொது […]

செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

  • Dec 25, 2024 - 10:48 AM
  • 0 Comments

அமைச்சரவை உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுவுக்கான சட்டமூலத்தை தயாரிக்க அனுமதியளித்துள்ளது திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

செய்திகள்

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியை பயனபடுத்தி நிதி மோசடி முறைப்பாடு

  • Dec 25, 2024 - 10:30 AM
  • 0 Comments

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஒரு தரப்பினர் நிதி மோசடி செய்வதாகத் தெரிவித்து அது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்ததன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஒரு தரப்பினர் இந்த நிதி மோசடிகளை செய்துள்ளனர். […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா

  • Dec 25, 2024 - 01:44 AM
  • 0 Comments

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் குழுவிலிருந்து இலங்கை வெளியேறினாலும், மீண்டும் சர்வதேச நிதிச் சந்தையில் செயலூக்க உறுப்பினராக மாற இன்னும் வாய்ப்புகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இணங்கிய பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்வதும், கடன் மதிப்பீட்டை உயர்த்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இலங்கையின் தற்போதைய நிலைமையை விளக்கி இதனைக் குறிப்பிட்டிருந்தார். Fitch Ratings இலங்கையின் கடன் மதிப்பீட்டை […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)24.12.2024

  • Dec 25, 2024 - 12:41 AM
  • 0 Comments

கிளிநொச்சியில் மதுபான சாலைகளை மூடுமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர் யாழ் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்களம் அதிரடி நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் தூக்கிட்டு தற்கொலை ஐநாவுக்கும் சுற்றுலா அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. அரிசி இறக்குமதிக்கு அமைச்சர் அனுமதி https://youtu.be/XUBjvvAVIqA

உள்ளூர்

யாழ் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்களம் அதிரடி நடவடிக்கை

  • Dec 24, 2024 - 09:50 PM
  • 0 Comments

யாழ் மாவட்டத்தில் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுள்ளது. அதன்படி இன்று யாழ்ப்பாணம் நல்லூர்இ உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் சுகாதாரத்திணைக்களத்தை சேர்ந்த 9 குழுக்கள் களத்தில் இறங்கின இதனால் 76 உணவு கையாளும் நிலையங்கள் மேற்பார்வை செய்யப்பட்டதில் 28 உணவு கையாளும் நிலையங்களில் குறைபாடுகள் காணப்பட்டிருந்தன. 12 […]

செய்திகள்

அரிசி இறக்குமதிக்கு அமைச்சர் அனுமதி

  • Dec 24, 2024 - 08:30 AM
  • 0 Comments

அரிசி தட்டுப்பாட்டை இல்லாதொழிப்பதற்கு எத்pர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார் சந்தையில் நிலவும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 20ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, இதுவரை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அரிசியின் அளவு 67,000 மெற்றிக் தொன்களாகும். எவ்வாறாயினும், அரசினால் இறக்குமதி செய்யப்படும் 70,000 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தினால் ஓர்டர் செய்யப்பட்ட […]

உள்ளூர் செய்திகள்

ஹட்டன் பஸ் விபத்து தொடர்பில் வெளிவந்த தகவல்!

  • Dec 24, 2024 - 02:15 AM
  • 0 Comments

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு கவிழ்ந்த தனியார் பேரூந்து  நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விபத்தில் பேருந்தின் சாரதியின் கதவு பூட்டு இயங்காமையும் திடீரென கதவு திறந்த போது இருக்கையிலிருந்து சாரதி தூக்கி வீசப்பட்டமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் பொறுப்பதிகாரியின் பெறுப்பில் இருந்த பேரூந்தை பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் பார்வையிட்டார். மேலும், ஓட்டுனர் பாதுகாப்பு […]

செய்திகள்

சித்திரை புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது- உதய கம்மன்பில

  • Dec 23, 2024 - 09:33 PM
  • 0 Comments

மார்ச் – ஏப்ரல் வரையான காலப்பகுதியில் சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளதால் மே மாதமளவில் தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp