தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் தெரிவு
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று (28) கூடியது இதன்போது கட்சியின் தலைமை தொடர்பான விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தது. இது தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்கள் இருந்தபோதும் 18 உறுப்பினர்கள் கையொப்பமிடப்பட்ட ஆவணம் ஒன்று சபைக்கு கையளிக்கப்பட்டது. […]









