e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeb9e0af86e0aeb0e0af8be0aeafe0aebfe0aea9 | Pathivu News செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் பாவனை அதிகரித்துள்ளதா?

  • Dec 27, 2024 - 10:45 PM
  • 0 Comments

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் (27) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வைத்து 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0aea4e0af80e0aeb5e0aebfe0aeb0e0aeaee0ae9fe0af88e0aeafe0af81e0aeaee0af8d e0ae8ee0aeb2e0aebfe0ae95 | Pathivu News உள்ளூர் செய்திகள்

யாழில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்!

  • Dec 27, 2024 - 02:47 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தை பாதித்துள்ள எலிக்காய்ச்சல் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளதாக வடக்கில் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் மீண்டும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் எலிக்காய்ச்சலை ஒழிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போதிலும், எலிக்காய்ச்சல் தொற்றின் அதிகரிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எவ்வாறாயினும், வடக்கு பிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலைகளில் எலிக்காய்ச்சலால் ஒன்பது நோயாளிகள் உயிரிழந்துள்ளதுடன், 234 பேர் இந்நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர். அத்துடன் […]

e0aeb5e0af86e0aeb3e0af8de0aeb3e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0aebee0aeb2e0af8d e0ae9ae0af87e0aea4e0aeaee0ae9fe0af88e0aea8e0af8de0aea4 | Pathivu News உள்ளூர் செய்திகள்

வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள்!

  • Dec 27, 2024 - 02:44 AM
  • 0 Comments

மோசமான வானிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2024/25 பெரும்போக நடவடிக்கையில் கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணி தற்போது வேளாண் வளர்ச்சித் துறையின் உதவியுடன் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் பங்களிப்புடன் செய்யப்படுகிறது. இவற்றில் பொலன்னறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் சேத ஆய்வு தற்போது நிறைவடைந்துள்ளது. இதுதவிர மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் 29 […]

e0ae86e0aeb4e0aebf e0aeaae0af87e0aeb0e0aeb2e0af88e0aeafe0aebfe0aea9e0af8d 20e0ae86e0aeaee0af8d e0ae86e0aea3e0af8de0ae9fe0af81 e0aea8 | Pathivu News உள்ளூர் செய்திகள்

ஆழி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு!

  • Dec 27, 2024 - 02:18 AM
  • 0 Comments

இலங்கை உட்பட பல நாடுகளில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்த சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து  20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த பெரும் சோகத்தில் உயிரிழந்த நாட்டு மக்கள் இன்று நாடளாவிய ரீதியில் நினைவுகூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டனர் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட ஆழிப்பேரலையால், பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரின் உயிர்கள் காவு வாங்கப்பட்டன. காலை 6.58 […]

e0ae9ae0af81e0aea9e0aebee0aeaee0aebfe0aeafe0aebee0aeb2e0af8d e0ae95e0aebee0aeb5e0af81e0ae95e0af8ae0aeb3e0af8de0aeb3e0aeaae0af8de0aeaa | Pathivu News உள்ளூர்

சுனாமியால் காவுகொள்ளப்பட்டோருக்கான நினைவேந்தல் – முல்லைதீவு

  • Dec 26, 2024 - 10:36 AM
  • 0 Comments

ஆழிப்பேரலையால் அடித்துச்செல்லப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) காலை 8.05 மணியளவில் புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக நினைவுகூறப்பட்டது வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள , புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். நினைவு தூபிக்கு […]

e0ae9ce0af8be0ae9ae0aeaae0af8d e0aeaae0aeb0e0aeb0e0aebee0ae9ce0ae9ae0aebfe0ae99e0af8de0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d 19 | Pathivu News உள்ளூர் செய்திகள்

ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு.

  • Dec 26, 2024 - 01:41 AM
  • 0 Comments

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட  முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் […]

e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0aea4e0aeaee0aea4e0af81 e0ae9ae0af8ae0aea8e0af8de0aea4 e0ae95e0aebee0aea3e0aebfe0ae95e0aeb3 | Pathivu News உள்ளூர் செய்திகள்

மக்கள் தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் – வடக்கு ஆளுநர்!

  • Dec 26, 2024 - 01:31 AM
  • 0 Comments

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு தன்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளதாக என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும்  வயாவியானில் […]

e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 19 | Pathivu News உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)25.12.2024

  • Dec 26, 2024 - 12:26 AM
  • 0 Comments

இலங்கையுடனான உறவுக்க மிகுந்த ஆவல்- சீனா அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியை பயனபடுத்தி நிதி மோசடி முறைப்பாடு ஜோசப் பரராஜசிங்கம் எம்பியின் 19ஆண்டு ஆவது நினைவுநாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டது சீனக் கப்பலில் சிகிச்சை பெற்றவர்களை பார்வையிட்ட பிரதமர் ஹரிணி பார்வையிட்டார் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் https://youtu.be/W4XUO0UJt3k

e0ae9ce0af8be0ae9ae0aeaae0af8d e0aeaae0aeb0e0aeb0e0aebee0ae9ce0ae9ae0aebfe0ae99e0af8de0ae95e0aeaee0af8d e0ae8ee0aeaee0af8de0aeaae0aebf | Pathivu News செய்திகள்

ஜோசப் பரராஜசிங்கம் எம்பியின் 19ஆண்டு ஆவது நினைவுநாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டது

  • Dec 25, 2024 - 09:40 PM
  • 0 Comments

.மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன் சிறிநாத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற […]

e0ae89e0aeb3e0af8de0aeb3e0af81e0aeb0e0aebee0ae9fe0af8de0ae9ae0aebfe0aeaee0aea9e0af8de0aeb1e0aea4e0af8d e0aea4e0af87e0aeb0e0af8de0aea4 | Pathivu News செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

  • Dec 25, 2024 - 10:48 AM
  • 0 Comments

அமைச்சரவை உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுவுக்கான சட்டமூலத்தை தயாரிக்க அனுமதியளித்துள்ளது திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp