செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய ரணில் ஏன் குழுவை நியமித்தார் சந்தேகம் வெளியிட்டார்- பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

  • Oct 22, 2024 - 09:19 PM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் நியமித்த குழுவின் விசாரணைகளின் நம்பகதன்மை குறித்து சந்தேகம் இருப்பதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏஎன்ஜே அல்விஸ் தலைமையில் குழு அமைத்ததன் உள்நோக்கம் என்னவென மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். ஷானி அபயசேகரவையும் ரவி செனிவிரத்னவையும் அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டதா என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

செய்திகள்

ஓய்வுபெற்ற நீதியரசர் அல்விஸின் அறிக்கையை நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

  • Oct 22, 2024 - 03:57 PM
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் நேற்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அருட்தந்தை சிறில் காமினி மேற்கண்டவாறு தெரிவித்தார். பொரளையிலுள்ள அமைந்துள்ள பேராயர் இல்லத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே சிறில் காமினி இவ்வாறு தெரிவித்தார். ‘கொலை விசாரணையில் சாட்சியங்களை மறைத்தமை மற்றும் அழித்தமை தொடர்பான குற்றவியல் குற்றச்சாட்டைப் பெற்றுள்ள பிரசன்ன அல்விஸின் சகோதரியான ஏ.எம்.ஜே. டி அல்விஸை இந்தக் குழுவின் […]

உலகம்

அமெரிக்காவில் வானொலி கோபுரத்துடன் ஹெலிகொப்டர் மோதி விபத்து 4 பேர் பலி.

  • Oct 22, 2024 - 03:42 PM
  • 0 Comments

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இது ஒரு சோகமான உயிரிழப்பு ஆகும். விபத்து நடைப்பெற்ற பகுதியில் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவம் […]

செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளராக சி.சிவகஜன் தெரிவு.

  • Oct 21, 2024 - 04:54 PM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக இதுவரை காலமும் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதியாக வெற்றி நடைபோட உழைத்தவர் ஆகும். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன், மாணவர் ஒன்றியத்தையும், மாணவர்களையும் அவர் வழிநடத்திச் சென்றார். சோ.சிந்துஜனின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் சிவகஜன் தெரிவு செய்யப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்

உதய கம்மன்பில பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்- கர்தினால் மல்கம் ரஞ்சித்.

  • Oct 21, 2024 - 03:46 PM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளனர். முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணைகள் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது என கர்தினால் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் 2 அறிக்கைகளில் ஒன்றில் ஈஸ்ட்டர் தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் காணப்படுகின்றன. புதிய அறிக்கைகளில் அரசாங்கத்தின் தற்போதைய அறிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது, திருச்சபையானது 2 அறிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஜனாதிபதி அநுரகுமார […]

உள்ளூர்

மாவை சேனாதிராஜா திடீரென வைத்தியசாலையில் அனுமதி

  • Oct 20, 2024 - 12:29 PM
  • 0 Comments

திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா. அவரின் உடல்நலம், அவருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்தார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தொடர்ச்சியாக உடல் நலத்துடன் தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என இளம் அரசியல் தலைவர்கள் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்  

செய்திகள்

இரத்தப் பரிசோதகரை மாற்ற வேண்டாம் அச்சுவேலி மக்கள் ஆர்ப்பாட்டம்.

  • Oct 19, 2024 - 01:41 PM
  • 0 Comments

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை தெல்லிப்பழைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஆய்வுக்கூடத்தில் இரத்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இந்த பணிமாற்ற உத்தரவு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெற்றிடத்துக்கு புதிதாக ஒருவரை நியமிக்க இரண்டு மாதங்களுக்கு மேலாகும் என கூறப்பட்டுள்ளது.ஆகவே இரத்த பரிசோதனைக்கு வேறிடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் அல்லது; பணம் கொடுத்து; பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு மக்கள்  தள்ளப்பட்டுள்ளனர். அச்சுவேலி வைத்தியசாலையில் டெங்கு […]

செய்திகள்

ரணிலிடம் 13 மஹிந்தவிடம் 15 அரச வாகனங்களாம்

  • Oct 19, 2024 - 01:04 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் பயன்படுத்தும் மேலதிக அரச வாகனங்களை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் வேணடுகோள் விடுத்துள்ளது. அரச வாகனங்களை ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போது; இதுவரை கையளிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 […]

உள்ளூர் செய்திகள்

விக்னேஸ்வரன், சுமந்திரன், டக்ளஸ் சாணக்கியன் அனைவரும் ஊழல்வாதிகள் – கஜேந்திரக்குமார்.

  • Oct 18, 2024 - 11:21 AM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதன்போது கருத்து தெரிவித்த அவர், தமிழ்தேசிய மக்கள் முன்னணி வடகிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் மட்டுமே போட்டியிடுகின்றது இலங்கையில் இரண்டு தேசங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார் எங்கள் தேச அந்தஸ்து என்பது தவிர்க்கமுடியாத தேவைப்படுகின்ற ஒரு நிலைப்பாடு இந்த […]

செய்திகள்,தமிழ்செய்திகள்,யாழ்ப்பாணம்செய்திகள், உள்ளூர்

மூன்று நாட்கள் காலக்கெடு வழங்கியது அரசு உதய கம்மன்பிலவுக்கு

  • Oct 16, 2024 - 12:00 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இமாம் மற்றும் அல்விஸ் விசாரணைக்குழு அறிக்கைகள் மறைத்து வைத்திருப்பது குற்றம் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எனவே அவற்றை உரிய தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு அரசாங்கம் 3 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதியரசர்களான இமாம் மற்றும் அல்விஸ் ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கைகளை புதிய அரசு 7 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உதய கம்மன்பில […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp