உள்ளூர் செய்திகள்

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா

  • Dec 25, 2024 - 01:44 AM
  • 0 Comments

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் குழுவிலிருந்து இலங்கை வெளியேறினாலும், மீண்டும் சர்வதேச நிதிச் சந்தையில் செயலூக்க உறுப்பினராக மாற இன்னும் வாய்ப்புகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இணங்கிய பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்வதும், கடன் மதிப்பீட்டை உயர்த்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இலங்கையின் தற்போதைய நிலைமையை விளக்கி இதனைக் குறிப்பிட்டிருந்தார். Fitch Ratings இலங்கையின் கடன் மதிப்பீட்டை […]

உள்ளூர்

யாழ் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்களம் அதிரடி நடவடிக்கை

  • Dec 24, 2024 - 09:50 PM
  • 0 Comments

யாழ் மாவட்டத்தில் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுள்ளது. அதன்படி இன்று யாழ்ப்பாணம் நல்லூர்இ உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் சுகாதாரத்திணைக்களத்தை சேர்ந்த 9 குழுக்கள் களத்தில் இறங்கின இதனால் 76 உணவு கையாளும் நிலையங்கள் மேற்பார்வை செய்யப்பட்டதில் 28 உணவு கையாளும் நிலையங்களில் குறைபாடுகள் காணப்பட்டிருந்தன. 12 […]

செய்திகள்

அரிசி இறக்குமதிக்கு அமைச்சர் அனுமதி

  • Dec 24, 2024 - 08:30 AM
  • 0 Comments

அரிசி தட்டுப்பாட்டை இல்லாதொழிப்பதற்கு எத்pர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார் சந்தையில் நிலவும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 20ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, இதுவரை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அரிசியின் அளவு 67,000 மெற்றிக் தொன்களாகும். எவ்வாறாயினும், அரசினால் இறக்குமதி செய்யப்படும் 70,000 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தினால் ஓர்டர் செய்யப்பட்ட […]

செய்திகள்

சித்திரை புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது- உதய கம்மன்பில

  • Dec 23, 2024 - 09:33 PM
  • 0 Comments

மார்ச் – ஏப்ரல் வரையான காலப்பகுதியில் சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளதால் மே மாதமளவில் தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி […]

செய்திகள்

சின்ன கோட்டாபய தான் ஜனாதிபதி அநுர- கோவிந்தன் கருணாகரம்

  • Dec 23, 2024 - 03:17 PM
  • 0 Comments

ஜனாதிபதியாக கோட்டாபய ராசபக்ச வந்ததும் சிறுபான்மை சமூகங்களை எவ்வாறு பார்த்தரோ அதே போன்றே இனவாத கண்கொண்டு ஜனாதிபதி அநுர பார்ப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக் கரையிலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆட்சிக்கு வந்ததும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு முடிவைக் கொண்டுவருவோம் என சில வாக்குறுதிகள் அளித்தனர். ஆனால் […]

செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் பெரிய மாற்றமில்லை

  • Dec 23, 2024 - 01:39 PM
  • 0 Comments

ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் அறிக்கையின் படி நவம்பர் 2024 க்கான மொத்த ஏற்றுமதிகள், சரக்குகள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து, 1,269.33 மில்லியனாக டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 0.04 வீத அதிகரிப்பை மட்டுமே காட்டுகின்றது இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, 2024 நவம்பரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 943.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இது நவம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது 5.6 சரிவையே […]

உள்ளூர்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் அதன் இருப்புக்களில் கை வைக்கும் மத்திய அரசு

  • Dec 23, 2024 - 12:37 PM
  • 0 Comments

யாழ் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால்; திறந்து வைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கடந்த காலங்களில் மிகவும் தூய்மையான நகரமாக இருந்தது. […]

செய்திகள்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற எதி;ர்வரும் 2 ம் திகதி ஆரம்பம்!

  • Dec 23, 2024 - 12:24 PM
  • 0 Comments

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் அத்துடன், அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது

உள்ளூர் செய்திகள்

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!

  • Dec 23, 2024 - 01:36 AM
  • 0 Comments

சட்டத்தின் ஆட்சியையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் பெசில் பெர்னாண்டோ எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, இந்நாட்டில் சட்ட சீர்திருத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான மூன்று விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றங்களில் கடுமையான குற்றவியல் வழக்குகளை தினசரி விசாரணை […]

செய்திகள்

பாடசாலைகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது என்கிறார் பிரதமர்

  • Dec 21, 2024 - 09:16 PM
  • 0 Comments

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களான, ஆசிய ஆசிரியர் அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவு ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு ; தெரிவித்தார். அத்துடன் கன்னங்கராவின் கல்விச் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp