செய்திகள்

அரச அதிகாரிகளோட போராட வேண்டியுள்ளது அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கவலை

  • Dec 29, 2024 - 10:05 PM
  • 0 Comments

அவர்கள் மாறுவதற்கு தயார் இல்லையெனில் அவர்களையும் மாற்றி எமது இந்த பயணத்தை முன்னெடுப்போம். அதற்காக எந்தவொரு சவாலையும் ஏற்றுக் கொள்ள நாம் தயாராகவே உள்ளோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தேசிய அருங்கலை பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி கைவினைப்பொருடக்ளுக்கான விருது வழங்கல் விழா கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்; நாம் அரசாங்கத்தை […]

செய்திகள்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா ஓய்வு பெறுகிறார்

  • Dec 29, 2024 - 10:00 PM
  • 0 Comments

இலங்கையின் பாதுகாப்பிற்கு பங்களிப்பை வழங்கிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, கடந்த 2020 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சேவையாற்றினார். இவர் இலங்கை இராணுவத்தில் தியத்தலாவவிலுள்ள இலங்கை இராணுவ பீடத்தில் 19 ஆவது அதிகாரி கேடட் ஆட்சேர்ப்பு பாடநெறியில் 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி சேர்ந்தார். சவேந்திர சில்வா இலங்கையில் நடைபெற்ற யுத்த நடவடிக்கையில் விசேடமாக செயற்பட்டிருந்தார். 58வது படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டார். பின்னர் 2019 […]

செய்திகள்

மியன்மார் அகதிகளை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக்குழுக்கு அனுமதி மறுப்பு

  • Dec 29, 2024 - 09:51 PM
  • 0 Comments

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி எல். டி. பி.தெஹிதெனிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மியான்மரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த அகதிகளிடம் விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் […]

செய்திகள்

இலவசமாக பயணிக்க அனுமதியளித்ததால் தொடரூந்து, பேரூந்துக்கு 7கோடி நட்டம்.

  • Dec 29, 2024 - 09:06 AM
  • 0 Comments

இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கக் கூடிய வகையில் 08 தொழிற்சங்கங்களுக்கு இலவச அனுமதி சீட்டுகளை வழங்கியதனூடாக, ரயில்வே திணைக்களத்துக்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் 2023 ஆம் ஆண்டு சுமார் 07கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது 2023 ஆம் ஆண்டு ஸ்தாபனக்கோவைக்கு முரணாக இந்த இலவச அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 08 தொழிற்சங்கங்களுக்கு 138 (ழுpநn குசநந Pயளள) இலவச அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், 2023ஆம் ஆண்டு மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு […]

செய்திகள்

அநுர அரசு மக்களுக்கு படம் காட்டுகின்றது- சிவாஜிலிங்கம்

  • Dec 29, 2024 - 08:49 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் கதைகளை கூறி படங்களை காட்டிக் கொண்டிருக்கின்றது. அதை விடுத்து பகிரங்கமாக மக்களுக்கு உண்மைகளைக் கூறி செயலில் இறங்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. ஜேவிபி என்கிற கட்சியானது தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து பல குழப்பங்களைச் செய்து வந்திருந்தனர். […]

செய்திகள்

சிவமோகன் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் உட்பட பலர் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கம்

  • Dec 28, 2024 - 08:06 PM
  • 0 Comments

கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பின் சி. சிவமோகனும் கட்pயிலிருநந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியாஇன்று (28) இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கட்சியின் உறுப்பினரான […]

செய்திகள்

இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு ஆளுநரை சந்தித்து வடக்கு கல்விப்புலம் தொடர்பில் கலந்துரையாடினர்.

  • Dec 28, 2024 - 07:52 PM
  • 0 Comments

2017ஆம் ஆண்டு, வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதல் நியமனம் கிடைத்த ஆசிரியர்கள், யாழ். மாவட்டத்துக்கு இடமாற்றத்துக்கு விண்ணப்பித்துள்ளனர் அந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடினர். கடந்த காலங்களில் இடம்பெற்ற விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் அதில் தலையீடுகள் இருக்கின்றன எனவும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆளுநருக்கு […]

செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுபாப்பை இறுக்கும் ஜனாதிபதி

  • Dec 28, 2024 - 07:44 PM
  • 0 Comments

குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமானச் சேவை நிறுவனத்தின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துரையாடினார் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்படுத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுப்பது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமானச் சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் […]

செய்திகள்

தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் தெரிவு

  • Dec 28, 2024 - 06:11 PM
  • 0 Comments

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று (28) கூடியது இதன்போது கட்சியின் தலைமை தொடர்பான விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தது. இது தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்கள் இருந்தபோதும் 18 உறுப்பினர்கள் கையொப்பமிடப்பட்ட ஆவணம் ஒன்று சபைக்கு கையளிக்கப்பட்டது. […]

செய்திகள்

வவுனியாவில் அரசியல் கைதிகளுக்காக கையெழுத்துப் போராட்டம்

  • Dec 28, 2024 - 06:00 PM
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியே கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தபால் நிலையத்துக்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் மதத் தலைவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.  

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp