சிங்கள மாவட்டங்களையும் தமிழ் மாவட்டங்களையும் வரவு – செலவுத் திட்டத்தில் அரசு வேறுபடுத்தியிருக்கின்றது- – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இருப்பினும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான தீர்வுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. எம் மக்களுக்கு முரண்பாடற்ற தீர்வு கிடைக்கும் வரையில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை தவிர வேறு எந்த தெரிவுகளும் தமக்கு கிடையாது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழர் பிரதேசங்களில் ஆக்கிரமிப்புக்கள் இன்றும் தொடர்கின்றன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். […]









