கொழும்பிலிருந்து பயணித்த பஸ் ஏ-9 வீதியில் விபத்து : 5 பேர் காயம்
யாழ் நோக்கி பயணித்த பஸ் ஏ-9 வீதி மிருசுவில் பகுதியில் விபத்திற்குள்ளானது கொழும்பிலிருந்து பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து ஒன்று, சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் காயமடைந்ள்ளனர். இன்று (18) அதிகாலையில் ஏ-9 வீதி, மிருசுவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.









