Npp அரசாங்கத்தின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான மாபெரும், கண்டன பேரணியும், உண்ணாவிரத போராட்டமும், சாவகச்சேரி பஸ் நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் குறித்த பேரணியும், உண்ணாவிரதப் போராட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்சி பேதமின்றி அனைவரும் கலந்து கொள்ளுமாறு பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
அனைவரும் கட்சி பேதங்களின்றியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள் அனைவரையும், கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன்,
குறித்த போராட்டம் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், மாகாண சபை தேர்தலை உடனடியாக நாடாத்தக் கோரியும், பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், செம்மணி புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று கோரியும், அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தியுமே குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்
பூ.லின்ரன்
வடமராட்சி பச்சிளைப்பள்ளி நிருபர்
What’s your Reaction?

