அண்மையில் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20.08.2026) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் செப்டெம்பர் மூன்றாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?

