முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளைஞன் ஒருவர் தீடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் (18.05.2026) இரவு ஆட்டிறைச்சி கறியுடன் சாப்பிட்டு உறங்கிய குறித்த இளைஞன், காலையில்(19.05.2026) தாயார் சென்று எழுப்பும் போது விறைத்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர், பிரேத பரிசோதனையில் அதிக சந்தோசமாக இருந்ததன் காரணமாக மாரடைப்பு வந்து உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த விஜயகுமார் டல்சன் என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனுக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இந்த துயரம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து நிற்கின்றோம்

