புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக முதல்வருக்கு யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் கோரிக்கை..!

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனப் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் தெரிவித்தார்.

யாழில் உள்ள கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவர்களுக்கு யாழ் மாவட்ட மீனவ மக்கள் சார்பில் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு , சில விடயங்களை கோரிக்கையாக முன்வைக்க விரும்புகிறோம்.

கச்சதீவு இலங்கையின் சொத்து முறைப்படி இலங்கை அதனை பெற்றுக் கொண்டிருப்பது இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக கடற் தொழில் மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறான நிலையில் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது கச்சதீவை இந்தியா மீட்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்கள்.

நாங்கள் அதை பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளவில்லை ஏனெனில் தமிழ்நாட்டில் இடம் பெறும் தேர்தல்களில் மீனவ மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வேட்பாளர்கள் இவ்வாறு பேசுவது தொடர் கதையாக இருந்த வருகிறது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை