கிளிநொச்சியில் மாவீரர் நினைவுப் பதாதைகளை நேற்று இரவு(22.11.2026) அகற்றிய பொலிசார்.
இதுவரை எந்த அரசாங்கத்தினாலும் நடைபெறாத ஒன்று இந்த அரசாங்க காலத்தில் நடைபெற்றுள்ளது.
உறவுகளை நினைவுகூர்வதும் குற்றமா? நினைவுப் பதாதைகள் அகற்றப்பட்டமை தமிழ் மக்களின் மனங்களில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது
உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்படுவது வழமை.
மாவீரர் நினைவுப் பதாதைகளை இம்முறை பொலிஸார் வலுக்கட்டாயமாக அகற்றியதுடன், அவற்றுடன் தொடர்புடைய எட்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட எட்டு பேரிடமும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பொலிஸ் நிலையத்திற்கு எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் சமூகமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1444022867412289
What’s your Reaction?

