உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் இன்றும் விசாரணைக்கு..!

petitions against organized crime prevention bill heard today | Pathivu News
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (09.11.2026) உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இந்த மனுக்கள் கடந்த முறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த சட்டமூலம் தொடர்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தரப்புக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதற்கமைய, சட்டத்தரணிகளால் தங்களது எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று இரண்டாம் நாளாக மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊