இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய தீபாவளி விழா பூசை நேற்று (08.11.2026) காரைதீவு ஸ்ரீ மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
காரைதீவு பிரதேசசெயலக உதவிபிரதேச செயலாளர் திரு ப. பிரணவரூபன் தலமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுளா சுகத் ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர், எஸ்.பாஸ்கரன் அவர்களும் ஆன்மிக அதிதியாக ஆலயபிரதம குரு சிவ ஸ்ரீ கோவர்த்தன சர்மா அவர்களும் பிரதேச முக்கிய பிரமுகர்கள் சகல ஆலய தர்மகர்த்தாக்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் பெருந்திரளான பக்த அடியார்கள், மாவடி ஸ்ரீ கந்தசாமி ஆலய பரிபாலன சபையினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது ஆலயத்தில் நந்திக் கொடி ஏற்றப்பட்டு, இறை வழிபாடுகளுடன் தேசிய தீபாவளி விழா பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


