இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் “PayDigital Jaffna” விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(07.08.2026) யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்க வளாகத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு தனது உத்தியோகபூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தொடுகை பரிவர்த்தனையையும் ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகள் திணைக்கள இயக்குநர் வசந்த அளுவிஸ், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.சிவகரன், இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சிப் பிராந்திய முகாமையாளர் பாமினி செந்தில்மாறன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாறப்பன, மத்திய வங்கியின் உயரதிகாரிகள், அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?

