மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச தொழில் சந்தை நேற்றையதினம் (15.07.2026) “நாவிதன்வெளி பிரதேச கலாசார மண்டபத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜீந்திரன் தலைமையில் இடம் பெற்றது இந் நிகழ்வுக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நிரூபா திணைக்கள மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் . பல தொழில் வழங்கும் தனியார் நிறுவனங்கள் (HNB Life, Amana Taka Full life, celince life, metropolitan college Green plantation, Pj Agro Farming, Bl ommer investment மற்றும் Airforce, Naita போன்ற அரச நிறுவனங்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரதேசத்தில் காணப்படும் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தங்களிடம் காணப்படும் தொழில் வாய்ப்புகள் பற்றி அறிவுரை வழங்கினார்கள்.
இந் நிகழ்வினை நாவிதன்வெளி பிரதேச மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். பாஸில் அவர்கள் ஒழுங்கு படுத்தியதோடு பிரதேச வேலையற்ற இளைஞர்கள், யுவதிகள் முற்று முழுதாக பயன் பெற வேண்டும் என்று தனது உரையிலும் குறிப்பிட்டார்.

What’s your Reaction?

