மன்னார் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நேற்று(08.04.2026) மாலை 2.30 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்ற நிலை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அதேவேளை, மாவட்ட விவசாயப் பிரிவின் தற்போதைய செயற்பாடுகள், விவசாயிகளுக்கு வங்கிகள் வழங்கும் சேவைகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மேலும், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களங்களின் செயற்பாடுகள் மற்றும் நீர்வழங்கல் நிலைமை தொடர்பாக அதிகாரிகள் விளக்கமளித்தனர். இதனுடன், மாகாண விவசாயத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், நெல் ஆராய்ச்சி பிரிவு, விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் விநியோகம் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.
கால்நடை அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பயிர் காப்புறுதி தொடர்பான சேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இறுதியாக, ஏனைய முக்கிய விடயங்களும் எடுத்துரைக்கப்பட்டு, மாவட்டத்தின் விவசாய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பயனுள்ள கருத்துகள் பகிரப்பட்டன.

What’s your Reaction?
