ஊடகவியலாளர் வசந்த சந்திரபாலவின் “வனஜீவ சரணிய” எனும் தனிநபர் புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் டிசம்பர் 02 மற்றும் 03ஆம் திகதிகளில் சாய்ந்தமருது கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சாய்ந்தமருது கலாசார மண்டபம் இக்கண்காட்சி இடம்பெறுவதுடன் எதிர்வரும் டிசம்பர் 02 மற்றும் 03ஆம் திகதிகளில் முற்பகல் 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இக்கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.
கண்காட்சியின் சிறப்பம்சம்: வனவிலங்குகள், யானைகள், சிறுத்தை மற்றும் அரியவகைப் பறவைகள் உள்ளிட்ட இயற்கை எழில்மிகு காட்சிகளை உள்ளடக்கிய தனித்துவமான புகைப்படங்கள் இதில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இக்கண்காட்சியைப் பார்வையிடுவதற்கான அனுமதிச்சீட்டுக் கட்டணமாக பாடசாலை மாணவர்களுக்கு 50.00 ரூபாவும், பெரியவர்களுக்கு 100.00 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இயற்கை மற்றும் வனஜீவராசிகள் மீதான ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிருபர்
பாறுக் ஷிஹான்
What’s your Reaction?

