மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை வலிகாமம் வடக்கு, தெல்லிப்பழையில் இடம்பெற்றது.
சிறுவர்களின் பேண்ட் வாத்திய இசையுடன் பெற்றோர், உரித்துடையோர் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து மாவீரரின் தந்தை ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர்வணக்கமும் இடம்பெற்றது.
நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.


What’s your Reaction?

