தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களது பெற்றோர்கள் உரித்துடையோரைத் தாயகத் தலைநகர் திருகோணமலையில் கௌரவிக்கும் நிகழ்வு மிகவும் எழுச்சியாக நேற்றைய தினம் (22.11.2026) திருகோணமலை உப்புவெளி பிரதேச சபைக் கலாச்சார மண்டபத்தில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினது ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
750 இக்கும் மேற்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விசேட பேருந்து ஏற்பாடுகள் மூலமாக அழைத்து வரப்பட்ட பெற்றோர்கள் அலஸ்தோட்டம் வைரவர் ஆலய முன்றலிலிருந்து தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் வரவேற்பு வாத்தியக் கலைஞர்களின் வரவேற்பு இசையுடன் உப்பு வெளிக் கலாச்சார மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களது பொதுப் படத்துக்கான மலர் மாலை மாவீரர்களின் பெற்றோர்கள் இருவரினால் அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச் சுடரினை தளபதி லெப்.சீலன் அவர்களின் மருமகளினால் பொதுச்சுடர் ஏற்றப்பட அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகளினை தொடர்ந்து பெற்றோர்களுக்கான மதியவிருந்துபசாரம் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்கள் உணர்வாளர்கள் அரசியல் பிரமுகர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








What’s your Reaction?

