அக்குறணை, குடுகலை பகுதியில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இன்று (04.11.2026) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தீ விபத்து காரணமாகப் பிரதான வீதியின் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், இச்சம்பவம் தொடர்பாகக் கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1129412263395617
What’s your Reaction?

